பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் வெளிநடப்பு
சென்னை:தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துமாணவர்கள் வெளிநடப்புச் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. அதில் மாணவ,மாணவியருக்கான பட்டங்களை ஆளுநர் பர்னாலா வழங்குவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திடீரென அதை மாற்றி, சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களே பட்டங்களை வழங்குவார்கள் எனஅறிவிக்கப்பட்டது. இதனால் பல மாணவர்களும், பிள்ளைகள் பட்டம் வாங்குவதைப் பார்க்க வந்திருந்தபெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து விட்டு வெளிநடப்புச் செய்தனர். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களும், பெற்றோர்களும் கோபத்துடன் செய்தியாளர்களிடம்கூறுகையில்;
பாதுகாப்பு என்ற பெயரில் பல்கலைக்கழக அதிகாரிகள் எங்களை அவமதித்து விட்டனர். எனவேதான்பட்டங்களை வாங்காமல் நாங்கள் புறக்கணித்தோம் என்றார்.
மாணவர்களின் புறக்கணிப்பையைடுத்து ஆளுநர் பர்னாலா, பல்கலைக்கழக டீனை அழைத்து மாணவர்களைசமாதானப்படுத்தி அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
டீனும், பிற அதிகாரிகளும் மாணவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர்அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநர் பர்னாலா பட்டங்களை வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications