எந்த பிரச்சனையையும் சந்திப்போம்- வைகோ
தேனி:மதிமுக தொண்டர்கள் எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை பந்தாடும் பக்குவமும், திறமையும் பெற்றவர்கள்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ, தேனி மாவட்டஎல்லைக்குள் நேற்று அடியெடுத்து வைத்தார். இரவில் தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.
தனது பேச்சின்போது மதிமுகவில் எழுந்துள்ள அதிருப்தி அலைகள் குறித்து சூசகமாக சுட்டிக் காட்டிப் பேசினார்.வைகோ பேசுகையில், இந்த நடைப்பயணம் கட்சிப் பிரசாரம் அல்ல. அரசியல் நோக்கத்திற்காகவும் அல்ல.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தத் தவறி விட்டது. தமிழக உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டது. இப்பிரச்சினையில் மீண்டும் உச்சநீதிமன்றத்துக்குப் போவோம் என்பது தமிழர்களுக்குவிளைவிக்கப்படும் கேடு.
அணை உடையும் என்கிறார்கள். சீனப் பெருஞ்சுவர், கல்லணை போன்ற தொழில்நுட்பத்துடன் இந்த அணைகட்டப்பட்டுள்ளது. எனவே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கும்.
அறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ஒன்று. முருகனுக்கு எத்தனை கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூருக்குச்செல்லும் பக்தர்கள் அதிகம் உண்டு.
திருச்செந்தூருக்கு பாஞ்சாலங்குறிச்சி பக்தர்கள் சென்றபோது பானர்மேன் தலைமையில் ஆங்கிலப் படைகள்பாஞ்சாலங்குறிச்சிக்குப் படையெடுத்து வந்தது போல, நடைப்பயணம் தொடங்குகிற சமயத்தில் கட்சிக்கு நாசம்விளைவிக்க சிலர் எண்ணுகிறார்கள்.
ஆனால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும அவற்றைப் பந்தாடக்கூடிய தொண்டர்கள் மதிமுகவில் உள்ளனர்என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைகோ.
இந்தப் பொதுக் கூட்டத்திற்கு தமிழக பத்திரிக்கையாளர்களை விட அதிக அளவில் கேரளபத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் வந்திருந்து குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications