இஸ்லாமிய அமைப்புக்கு மலேசியாவில் தடை
கோலாலம்பூர்:இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரண்பாடான கொள்கையைக் கொண்ட அமைப்புக்குமலேசிய அரசு தடை விதித்துள்ளது.
மலேசியாவில் 90ம் ஆண்டுகளில், அல் அர்காம் என்ற அமைப்புதோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பில் 10,000 உறுப்பினர்கள் இருந்தனர். 1 லட்சம்பேர் வரை இந்த அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்தனர். அரசு ஊழியர்கள் பலரும்இதில் உறுப்பினர்களாக இருந்தனர்.
இயற்கையை மீறிய சக்தி உள்ளது என்பதுதான் அல் அர்காம் அமைப்பின் போதனை.இந்த சூப்பர் சக்தி மூலம் மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியும், வானில் செல்லும்விமானத்தை கீழே இறக்க முடியும் என்பது போன்ற பிரசாரத்தில் இந்த அமைப்பினர்ஈடுபட்டு வந்தனர்.
மேலும், இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களது பாவங்களைஅமைப்பின் தலைவர் அஸாரி முகம்மதுவிடம் இறக்கி வைத்து விட்டால் அவர்தங்களை காப்பார் என்றும் போதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த அமைப்பினரின் போதனைகளும், பிரசாரங்களும் மலேசியாவில் பெரும்சர்ச்சையை எழுப்பினர். இந்த அமைப்பின் கொள்கைகள் திருக்குரானுக்கு எதிரானது,முஸ்லீம் மார்க்கத்திற்கு முரண்பாடானது என்று எதிர்ப்புக் குரல் கிளம்பியது.இதையடுத்து அரசு இந்த இயக்கத்தைத் தடை செய்தது.
அஸாரி முகம்மது கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் புதிதாக ருபாகா கார்ப்பரஷேன் என்றநிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனம், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஜோர்டான் ஆகியநாடுகளில் ஹோட்டல்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது.
தற்போது ருபாகா (அரபி மொழியில் தோழர்கள் என்று பொருள்) என்ற பெயரில்புதிதாக ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அல் அர்காம் அமைப்பின் மறு உருவம்தான் ருபாகா என்ற சந்தேகம் மலேசியஅரசுக்கு எழுந்தது. இதையடுத்து ருபாகா அமைப்புக்கு மலேசிய அரசு தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மலேசியாவின் செலாங்கார் மாகாண இஸ்லாமிய விவகாரத்துறைசெய்தித் தொடர்பாளர் பக்ருல் அஸாம் யாஹியா கூறுகையில், அல் அர்காம்அமைப்பு கடந்த 1994ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
அந்த அமைப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்க ருபாகா அமைப்பினர் முயலுகின்றனர்.எனவேதான் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் யாஹியா.
ருபாகா அமைப்பின் 16 உறுப்பினர்கள் மீது செலாங்கார் மாகாண இஸ்லாமிய ஷரியாநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அவர்கள்நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications