சென்னையில் வெளியுறவு துறை கிளை அலுவலகம்
சென்னை:வெளியுறவுத் துறையின் கிளை அலுவலகம் விரைவில் சென்னையில் அமைக்கப்படும் என்று வெளியுறவுத்துறைஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகளின் மாநாடு, சென்னையில் நடந்தது. இதில் பிரணாப் பேசுகையில்,
வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகாரித்து வருகிறது. இதனால் புதியபாஸ்போர்ட் வழங்குவது, பாஸ்போர்ட் புதுப்பித்தல் பணிகள் அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 463 மாவட்ட பாஸ்போர்ட் மையங்களைத் தவிர, 1,095 விரைவு அஞ்சல் சேவைமையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணி
சிறப்பாக நடந்து வருவதற்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறனையும், வெளியுறவுத்துறைஇணையமைச்சர் அகமதுவையும் பாராட்டுகிறேன்.
அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களும் கணினிமயமாக மாற்றப்படும். பயோமெட்ரிக் பாஸ்போர்ட்வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பாஸ்போர்ட்டில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்டும்.இதன் மூலம் போலி பாஸ்போர்ட்களை தடுக்கமுடியும்.
தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவதற்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தத்கல் முறையில் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் (இதற்கு முன்10 நாட்களாக இருந்தது).
ரூ. 2,000 கட்டணம் செலுத்தினால் 14 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் (இதற்கு முன் 20 நாட்களாகஇருந்தது). தத்கல் முறையில் 5 நாட்களுக்கு பதிலாக மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படும்.அவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு அறிக்கை தேவையில்லை.
தத்கல் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு மத்திய அரசின் துணை செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்கள்,இதற்கு சமமான அந்தஸ்தில் உள்ள மாநில அரசு அதிகாரிகள், சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், முதல் வகுப்புஜூடியல் மாஜிஸ்திரேட், ராணுவத் துறையிலுள்ள மேஜர், போலீஸ் இன்ஸ்பெக்டர். தாசில்தார் ஆகியோர்சரிபார்ப்பு சான்றதழ் வழங்கலாம்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது குடம்பதினருக்கு தத்கல்முறையில் பாஸ்போர்ட் பெற அவர்களது அலுவலக தலைமை அதிகாரிகளிடம் சான்று பெறலாம்.
சாதாரணமாக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். தத்கல்முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா, ஹைத்ராபாத் ஆகிய இடங்களில் செயல்படுவதுபோலவே மத்திய அரசின் வெளியுறவுத்துறையின் கிளை அலுவலகம் சென்னையில் விரைவில் அமைக்கப்படும்எனவும் அவர் கூறினார்.
இந் நிகழ்ச்சியில் இணையமைச்சர் அகமத் பேசுகையில், மதுரை மற்றும் கோவையிலும் பாஸ்போர்ட்அலுவலகங்கள் திறக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications