குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற தாய்
வேலூர்:சித்திரை மாதத்தில் பெண் குழந்தை பிறந்தால் அதன் திருமணம் தடைபடும் என்றமுட்டாள்தனமான மூட நம்பிக்கையால், அந்தக் குழந்தைக்கு பாலில் விஷத்தைக்கலந்து கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
வேலூர் மாவட்டம் அணைகட்டு அருகே உள்ள கீழ் கொத்தூர் கிராமத்தச்ை சேர்ந்தவர்விநாயகம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு கலையரசி என்ற 10 மாத பெண்குழந்தை இருந்தது.
கடந்த 19ம் தேதி லட்சுமியும், அவரது மாமியார் தனலட்சுமியும் புல் அறுக்கச்சென்றனர். அப்போது வீட்டில் இருந்த குழந்தை வாயில் நுரை தள்ளி உயிருக்குப்போராடியது.
இதைப் பார்த்த விநாயகத்தின் மைத்துனர் தங்கமணி, அண்ணன் மனைவி அம்முலுஆகியோர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைபலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதையடுத்து லட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். அதில் அம்முலுதான்குழந்தைக்குக் கள்ளிப் பால் கொடுத்து கொன்று விட்டர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்த போலீஸார் விசாரணை நடத்தினர். லட்சமி வீட்டிலிருந்து விஷ பாட்டிலைகைப்பற்றினர். அதில் இருந்த கைரேகையை பதிவு செய்து விசாரித்ததில் அதுலட்சுமியின் கைரேகை எனத் தெரிய வந்தது.
இதையடுத்து லட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நான் தான்குழந்தையை விஷம் கொடுத்து கொன்றேன் என லட்சுமி ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக லட்சுமி கொடுத்த வாக்குமூலத்தில், எனது மகள் சித்திரை மாதத்தில்பிறந்தாள். அப்படிப் பிறந்தால் கல்யாணம் தாமத்படும் என்று உறவினர்களும், ஊரில்உள்ளவர்களும் தெரிவித்தனர்.
எனவே தான் நான் குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். திட்டமிட்டுபூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி வைத்து பாலில் கலந்து கொடுத்து விட்டேன் என்றுகூறியுள்ளார் லட்சுமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications