ஈழம்: பிரதமர் உதவ மாட்டார்-பெர்னாண்டஸ்
சென்னை:ஈழப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங் ஆர்வம் காட்டவில்லை,ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும்,சமாஜ்வாடி ஜனதாக் கட்சித் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
தமிழக நாடார் பேரவை சார்பில் இலங்கைத் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துசென்னை மெமோரியல் ஹால் பகுதியில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்குபேரவைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கினார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸும் இதில் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஈழத் தமிழர்களைக் காக்க பிரதமர்மன்மோகன் சிங் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பிரச்சினையை அவர் சுமூகமாகதீர்த்து வைக்க உதவுவார் என நான் நினைக்கவில்லை.
ஆக்கப்பூர்வமாக அவர் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. சில வாக்குறுதிகளைஅவர் அளித்துள்ளார். ஆனால் அதை நிறைவேற்றுவார் என நான் நினைக்கவில்லை.
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கை படையினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது. மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு எந்தவிதமான ஆயுத உதவியையும்அளிக்கக் கூடாது.
பசி, பட்டினியில் வாடும் இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான முறையில் இந்தியஅரசு உதவ வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும். இதில் கட்சி வேறுபாடு பார்க்கக் கூடாது. நான் பதவியில் இருந்தபோதும்சரி, இப்போதும் சரி எப்போதும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்என்றார் பெர்னாண்டஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications