நினைவு நாள்: பெரியார், எம்ஜிஆருக்கு அஞ்சலி
சென்னை:தந்தை பெரியார், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவுநாளையொட்டி அவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் 33வது நினைவு நாளையொட்டி பெரியார் திடலில் உள்ளபெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில்திராவிடர் கழகத் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியும் கலந்து கொண்டார்.
தமிழக அரசின் சார்பில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு நிதியமைச்சர்அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுஆகியோர் மாலை அணிவித்தனர்.
மதுரையில் உள்ள பெரியார் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். புதுவையில் பெரியார் சிலைக்கு மாநிலமுதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்தார்.
இதேபோல எம்.ஜி.ஆரின் 19வது நினைவு நாளையொட்டி, சென்னை கடற்கரையில்உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழியை வாசிக்கஜெயலலிதா உள்ளிட்டோர் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றினர்.
தமிழகம் முழுவதும் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கும் மாலைகள்அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications