தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
சென்னை:சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்தும்கடந்த சில நாட்களாக மிகவும் தாமதமாக வந்து செல்வதால் பயணிகள் கடும்அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தென் பகுதி நகரங்களுக்கு சென்னை எழும்பூரிலிருந்துதான் ரயில்கள்இயக்கப்படுகின்றன. கடந்த 1ம் தேதி முதல் இந்த ரயில்களின் புறப்படும், வரும்நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் பல ரயில்களின் வேகமும்அதிகரிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் சந்தோஷமடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அல்பாயுசாகிவிட்டது. கடந்த சில நாட்களாக தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும்சென்னையிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் கிளம்புவதில்லை. அதேபோலசென்னைக்கும் காலதாமதமாகவே வந்து கொண்டுள்ளன.
இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ரயில்கள் தாமதமாகபுறப்படுவதும், வருவதும் ஏன் என்று புரியாமல் பயணிகள்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் 6பிளாட்பாரங்களில் உள்ள தண்டவாளங்கள் நவீன முறையில் மாற்றி அமைக்கப்பட்டுவருகின்றன.
இதில் 5 மற்றும் 6வது பிளாட்பார தண்டவாளங்கள் மாற்றப்பட்டு விட்டன.மற்றவற்றில் பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக 1 முதல் 10வதுதண்டவாளங்கள் வரை ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே ரயில்கள் வருவதிலும், கிளம்புவதிலும் தாமதம் நிலவுகிறது.விரைவில் இது சரியாகி விடும் என்று ரயில்வே விளக்கம் தருகிறது.
சென்னை-கோவை ரயில் மங்களூர் வரை நீட்டிப்பு:
சென்னை எழும்பூரிலிருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்கப்படுகிறது.முதலில் இந்த ரயில் திருச்சி வழியாக ஈரோடு வரை இயக்கப்பட்டது. பின்னர்கோவைக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 3ம்தேதி முதல் இந்த ரயில், மங்களூர் வரைநீட்டிக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா புதுவை மாநிலத்திற்கு உட்பட்டமாஹே நகரில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு, புதுவை முதல்வர் ரங்கசாமிஉள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications