நடுக் கடலில் சிக்கித் தவித்த அகதிகள் மீட்பு
அறந்தாங்கி:இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்திற்கு வந்த அகதிகள், படகு நடுக் கடலில் பழுதடைந்ததால் கடும்பரிதவிப்புக்கு ஆளாகினர். அவர்களை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீட்டு வந்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நித்தியானந்தம், அவரது மனைவி, 1 மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட 7 பேர் நாட்டுப்படகு மூலம் தமிழகத்திற்குக் கிளம்பினர்.
சனிக்கிழமை இரவு கிளம்பிய அவர்கள் நடுக் கடலில் வந்தபோது படகின் மோட்டார் பழுதடைந்தது. இதனால்அவர்கள் பீதியடைந்தனர். உதவி கேட்டு குரல் எழுப்பினர். அப்போது அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அகதிகளை நோக்கிவிரைந்து சென்று அவர்களை மீட்டனர்.
தங்களது மீன்பிடி படகில் ஏற்றிக் கொண்டு ஜெகதாப்பட்டனம் கொண்டு வந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.அங்கு காவல் நிலையத்தில் நித்தியானந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது கடையை ராணுவம் அழித்துவிட்டது. எனது சகோதரர் இரு மாதங்களுக்கு முன்பு ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார்.
ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட அங்கு வழியில்லை. உணவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு நபருக்குரூ. 2000 பணம் கொடுத்து இந்தப் படகில் பயணம் செய்து வந்தோம் என்றார் நித்தியானந்தம்.












Click it and Unblock the Notifications