ஆசிரியர் பயிற்சி முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
சென்னை:விழுப்புரம் மாவட்டம் கண்டமனாடி கிராமத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிதொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமனாடி கிராமத்தில் ராயர் என்பவரும் அவரது மனைவி ஜெயா ராயரும் இணைந்துமுறையான அனுமதி இல்லாமல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் கலந்து கொள்ளமாணவர்கள் ஹால் டிக்கெட் பெற வந்தபோது அவர்களை வகுப்பறையில் போட்டு அடைத்து வைத்தது பள்ளிநிர்வாகம்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து மாணவ, மாணவியரை மீட்டனர். பரபரப்பைஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்தப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்த 75 பேரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்று பள்ளியில் ராயர் சேர்த்துள்ளார்என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராயரும், ஜெயா ராயரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பல மாவட்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்குமாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications