இந்திய ஒப்பந்தத்தை குப்பையில் வீசும் இலங்கை
கொழும்பு:ஜனவ> 1ம் தேதி முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகசெயல்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1987ம் ஆண்டுஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்ஒன்றாக இணைக்கப்பட்டன.
ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை உச்சநீதிமன்றம், இந்த இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து அதை தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்க இலங்கை அரசு முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இரு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்களாக செயல்படும் எனஇலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தற்போதைய வடகிழக்கு மாகாண ஆளுநராக உள்ள ரியர்அட்மிரல் மோகன் விஜேவிக்கிரமா கூறுகையில்,
நான் கிழக்கு மாகாண ஆளுநராக அதிபர் ராஜபக்ஷேவால் நியமிக்கப்பட்டுள்ளேன். வடக்கு மாகாணத்திற்குபுதிய ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வட-கிழக்குமாகாணங்கள் இனிமேல் தனித் தனி மாகாணங்களாக செயல்படும்.
கிழக்கு மாகாண செயல்பாடுகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். வடக்கு மாகாண செயல்பாடுகள் முழுமைபெற இன்னும் ஒரு ஆண்டு பிடிக்கலாம் என்றார்.
இலங்கை அரசின் இந்தப் பிரிவினைக்கு ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அமைப்பு கண்டனம்தெரிவித்துள்ளது. அமைப்பின் தலைவர் ஞானசேகரன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜதந்தி>மாகமாகாணங்கைளப் பி>க்கிறது இலங்கை அரசு.
இதன் மூலம் இந்தியாவுடன் ஏற்படுத்திக் காண்ட ஒப்பந்தத்தை அவமதித்து விட்டது. இந்தியாவையும்அவமதித்து விட்டது.
ஜெயவர்த்தனேவை விட ராஜபக்ஷே மிகவும் ஆபத்தான மனிதராக மாறியுள்ளார். சிங்கள பேரினவாதகட்சிகளின் நெருக்குதலுக்கு அவர் ஆளாகி விட்டார். ராஜபக்ஷேவின் போக்கு தமிழர்களை மேலும் சிக்கலில்ஆழ்த்தும் என்று கூறியுள்ளார்.
சுனாமி நிவாரணம்-அரசுக்கு புலிகள் கண்டனம்:
இதற்கிடையே சுனாமி நினைவு தினத்தையொட்டி புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மிகப் பெரிய இயற்கை சீற்றத்தில் உயிரிழந்த மக்களுக்கு எங்கள் ஆழ் மன அதிர்வுகளைகாணிக்கையாக்குகிறோம். தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திவிட்டதுசுனாமி. நொடிப் பொழுதில் 17,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் உயிரிழந்துவிட்டார்கள். தமிழர்கள்மட்டுமின்றி சிங்கள மக்களுக்கும் அவலங்களை சந்தித்தார்கள்.
ஆனால், சுனாமி பேரலைகளால் இலங்கை அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை. தமிழ் மக்களைஅழிக்கும் இலங்கை அரசு மற்றும் ராணுவத்தின் செயல் சுனாமியை விட கொடுமையானவை.
இலங்கை அரசால் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புப் படைகளின்வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை அரசு எந்தஉதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications