முஸ்லீம்களுக்கும் இடஒதுக்கீடு கோரும் விபிசிங்
லக்னெள:மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு எட்டு சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கோரியுள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு இயக்கத்தின்மாநாடு நடந்தது. அதில் வி.பி.சிங் கலந்து கொண்டு பேசுகையில்,
மத்தியில் இதற்கு முன்பு ஆட்சி செய்த பாஜக அரசு, சிறுபான்மை மக்களின்பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை.
தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசும், மாநில அரசுகளும், மண்டல்கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு எட்டு சதவீத இடஒதுக்கீடு வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டல் கமிஷன் பரிந்துரை 16 ஆண்டுகளுக்கு முன்பாக எனது ஆட்சியில்அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் அதன் பின்னர் வந்த மத்திய அரசுகளும், மாநிலஅரசுகளும் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுவழங்குவதை உறுதிப்படுத்தவில்லை.
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நல்லதல்ல தான். என்றாலும் இந்துமதத்தில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இடஒதுக்கீட்டின் மூலம் பலன்பெறுகின்றனர். அதே போல், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களும் பலனைஅனுபவிக்க வேண்டும்.
மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக,சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு உத்தரவு மூலம்அமல்படுத்திவிடலாம்.
உத்தரப் பிரதேசத்தில் எங்களது ஜன்மோர்சா ஆட்சிக்கு வந்தால், பதவியேற்ற மூன்றுமணி நேரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்படும்.
சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும்கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்றார் வி.பி.சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications