பிளேர் விமானம் தரையிறங்கியபோது விபத்து!
மியாமி:இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது குடும்பத்துடன் பயணம் செய்த விமானம்மியாமி நகரில் தரையிறங்கியபோது நிலை தடுமாறி ரன்வேயிலிருந்து விலகி,ஓடுபாதையோரம் இருந்த விளக்குகளை உடைத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் தனது மனைவி செர்ரி பிளேர் மற்றும்குழந்தைகளுடன் அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள பிரபல இசையமைப்பாளர்ராபின் கிப்ஸின் வீட்டுக்கு சுற்றுலா பயணமாக விமானம் மூலம் மியாமி வந்தார்.
பிளேர் பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மியாமி நேரப்படி மாலை 6.15மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கியது. ரன் வேயில் தரையிறங்கியவிமானம் மெதுவாகச் சென்றபடி நிற்க முயன்றபோது ரன்வேயிலிருந்து இறங்கிரன்வே ஓரமாக உள்ள விளக்குகள் சிலவற்றை உடைத்துக் கொண்டு நின்றது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானத்துக்கோ,பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து விமான நிர்வாகத்துறை செய்தித் தொடர்பாளர் லாரா பிரவுன் கூறுகையில், ரன்வேயைத் தாண்டி சிறிதுதொலைவு சென்று விமானம் நின்றது.
ரன்வேயில் அது பத்திரமாகத்தான் தரையிறங்கியது. மெதுவாக சென்றுகொண்டிருந்தபோது ரன்வேயைத் தாண்டி சிறிது தூரம் போய் நின்றது. இதனால்ரன்வே ஓரமாக இருந்த சில விளக்குகள் நொறுங்கின என்றார் பிரவுன்.
இந்த விமானத்தில் பிளேர் குடும்பத்தினருடன் சேர்த்து மொத்தம் 343 பயணிகள்இருந்தனர். பிளேரின் விமானம் தரையிறங்கியபோது மேகமூட்டமாக இருந்தது.மேலும் 2 மணி நேரத்திற்கு முன்புதான் லேசான மழை பெய்து ஓய்ந்திருந்தது. இதன்காரணமாக விமானியால் ரன்வேயை முழுமையாக பார்க்க முடியவில்லை.
பின்னர் விமானம் பின்னுக்கு இழுக்கப்பட்டு சரியான இடத்திற்குக் கொண்டு சென்றுநிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பிளேர் மற்றும் குடும்பத்தினர் பலத்த பாதுகாப்புடன்ராபின் கிப்ஸின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications