பட்டுக்கோட்டை-ஆற்றில் பஸ் விழுந்து 8 பேர் பலி
பட்டுக்கோட்டை:பட்டுக்கோட்டை அருகே அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாயினர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
நாகப்பட்டிணத்தில் இருந்து இன்று அதிகாலை ராமநாதபுரம் அருகே உள்ள தொண்டிக்கு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. காலை 4.45 மணியளவில் பட்டுக்கோட்டை நசுவினி ஆற்றுப் பாலத்தில் பஸ் போய்க்கொண்டிருந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.
அவர் தூக்கத்தில் இருந்திருப்பார் என்று தெரிகிறது. இதனால் பஸ் பாலத்தில் சுவற்றை உடைத்துக் கொண்டுஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரங்கம்மாள் (65), சீரங்கம் (50), ராமச்சந்திரன், சென்னையன், ஜெயபால் (50)உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே நீரில் மூழ்கி பலியாயினர்.
மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும் அந்தப் பகுதி மக்கள் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு இந்த 20க்கும் மேற்பட்டவர்களை ஆற்றிலிருந்து மீட்டனர். மற்றவர்கள் தாங்களாகவே நீந்திகரை சேர்ந்துவிட்டனர்.
காயமடைந்தவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு பெண்வழியிலேயே இறந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்டக்டர் பக்கிரிசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து பலத்த காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில்சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச் சம்பவத்தால் பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்துநெடுநேரம் பாதிக்கப்பட்டது.
ஆற்றில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் பெரும்பாலானவர்களால் உயிர் தப்பமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் பயணம் செய்து உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறுகையில், பஸ்ஸை டிரைவர் படு வேகத்தில்ஓட்டியதாகவும் பாலத்தில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் அதில் விட்டதாகவும், இதையடுத்து பஸ்கட்டுப்பாட்டை இழந்து சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் பாயந்ததாகவும் கூறினார்.
திருச்செங்கோடு அருகே விபத்து-5 பேர் பலி:
இந் நிலையில் திருச்செங்கோடு அருகே வேனும் மினி லாரியும் மோதிக் கொண்டதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பலியாயினர்.
திருப்பூரைச் சேர்ந்த 20 பக்தர்கள் வேன் மூலம் மேல்மருத்தூர் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.அதிகாலை எலிமேடு என்ற இடத்துக்கு அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி, வேன் மீது மோதியது. இதில்வேன் அப்பளமானது. இதில் சாந்தி, சுப்புலட்சுமி, ராஜேஸ்வரி, தேவி உள்பட 5 பேர் அந்த இடத்திலேயேஉயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications