மம்தா சீரியஸ்-ராணுவ டாக்டர்கள் தயார் நிலை
கொல்கத்தா:மேற்கு வங்க அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்மம்தா பாணர்ஜியின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து ராணுவ டாக்டர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்தின் சிறிய கார் உற்பத்திப் பிரிவுக்காக அம்மாநில அரசுவிவசாய நிலங்களை கையகப்படுத்தியது. இதற்கு மம்தா பாணர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே கொடுக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தி போராட்டங்களில்குதித்தார். ஆனால் நிலத்தை மீண்டும் திரும்ப வழங்க முடியாது என மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ்பட்டச்சார்யா திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதையடுத்து மம்தா பாணர்ஜி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். மம்தா உண்ணாவிரதத்தைஆரம்பித்து இன்றுடன் 25 நாட்கள் முடிந்து விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு மம்தாவின் நிலை மோசமடையத் தொடங்கியது. இன்று காலை அவரது உடல்நிலையைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு குளுக்கோஸ் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிலைமைமோசமாகும் என்று எச்சரித்தனர். ஆனால் குளுக்கோஸ் செலுத்துவதற்கு மம்தா மறுத்து விட்டார்.
இந் நிலையில் இன்று மாலை அவரது உடல் நலம் மேலும் மோசமடைந்தது. இதையடுத்து ராணுவ டாக்டர்கள்வரவழைக்கப்பட்டு அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிழக்குப் பிரிவு ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆர்.என். தாஸ் கூறுகையில், தயார் நிலையில் ராணுவடாக்டர்களை வைத்துள்ளோம். உதவி தேவைப்பட்டால் உடனடியாக அனைத்து விதமான சிகிச்சைகளையும்அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம்.
மொத்தம் எட்டு டாக்டர்கள் மம்தாவுக்கு அருகில் காத்துள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து வந்தஉத்தரவைத் தொடர்ந்து ராணுவ டாக்டர்கள் வந்துள்ளனர் என்றார் தாஸ்.
செவ்வாய்க்கிழமை மாலை முதல் மம்தாவுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. அவசர நிலை ஏற்பட்டால்உண்ணாவிரதம் இருந்து வரும் இடத்திலேயோ அல்லது கொல்கத்தா ராணுவ மருத்துவமனையிலோ சிகிச்சைஅளிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தற்போது மம்தாவின் உடல் நிலையை அவரது குடும்ப டாக்டர் ஷியாம்பாதா தாஸ் கவனித்து வருகிறார்.அவருடன் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 2 டாக்டர்களும் உடன் உள்ளனர்.
மம்தா உடல் நிலை குறித்து அவரது கட்சியின் தலைவர் மதன் மித்ரா கூறுகையில், மம்தாவின் உடல் நிலைமோசமடைந்து வருகிறது.
மம்தாவின் நிலையை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு தனது பிடிவாதத் தன்மையிலிருந்து இறங்கி வரவேண்டும். கைப்பற்றப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு மீண்டும் தர ஒப்புக் கொள்ள வேண்டும்.
ராணுவ டாக்டர்கள் வந்திருந்தாலும் அவர்களிடம் மம்தாவை ஒப்படைக்க நாங்கள் விரும்பவில்லை. அரசுசிங்கூர் விவகாரத்திற்கு தீர்வு காணும் வரை தனக்கு சிகிச்சை அளிக்க மம்தாவும் விரும்பவில்லை.
ஒரு வேளை மம்தா மருத்துவ சிகிச்சையை விரும்பினால் எங்களது கட்சி டாக்டர்களே கவனித்துக் கொள்வார்கள்என்றார் மித்ரா.
மம்தாவின் உடல் நிலை இன்னும் மோசமானால் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மம்தாவுடன் ஜெ தொலைபேசியில் பேச்சு:
இந் நிலையில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதத்தை அதிமுக எம்.பிக்கள் ஜோதி, கோகுல இந்திரா ஆகியோர் கொல்கத்தா சென்றுமம்தாவிடம் கொடுத்தனர். அப்போது மம்தாவிடம் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்என்று அப்போது அவர் கோரிக்கை விடுத்தார். கட்சியினருடன் பேசி முடிவு செய்வதாக அதற்கு மம்தா பதிலளித்தார்.
ஜெயலலிதா அனுப்பியிருந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது:நாட்டுமக்களின் நலனுக்காக நீங்கள் போராட வேண்டிய, வெற்றி பெற வேண்டிய களங்கள் ஏராளமாக உள்ளன. நீங்கள் நலமாகவும், திடமாகவும்இருந்தால்தான் அவற்றை சந்தித்து வென்றெடுக்க முடியும். அவற்றை மனதில் வைத்து இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
நாட்டுக்காற்றும் சேவையில் நீங்கள் எங்களுடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல, கோடானு கோடி இந்திய மக்களின்ஆசையும் அதுதான்.
உங்களது மூத்த சகோதரியான எனது வேண்டுகோளை ஏற்று தயவு செய்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications