எல்ஜி, செஞ்சி நாளை முதல் அகதிகள்-மதிமுக

Subscribe to Oneindia Tamil

சேலம்:எல்ஜியும் செஞ்சியும் நாளைய கூட்டத்திற்குப் பின் அரசியல் அகதிகள் வரிசையில் சேர்ந்து விடுவார்கள்.சீண்டுவார் இல்லாமல் இவர்கள் தவிக்கப் போவதை நாடு பார்க்கப் போகிறது என மதிமுக கொள்கை விளக்கஅணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

அவர் கூறுகையில்,

ஒவ்வொரு நிர்வாகிக்கும் ரூ. 2 லட்சம் கொடுத்து ஆள் பிடிக்கும் வேலையில் எல்.ஜியும், செஞ்சி ராமச்சந்திரனும்ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பொதுக்குழு உறுப்பினரைக் கூட இழுக்கமுடியவில்லை.

இவர்களை வாழ்த்தி வாழ்க என்று கோஷம் போடக் கூட நான்கு பேர் இல்லாமல் தொண்டர்களால்நிராகரிக்கப்பட்டவர்கள்தான் எல்.ஜியும், செஞ்சியும்.

சேலத்தில் இவர்கள் கூட்டியிருப்பது பொதுக்குழுவே அல்ல, இது புதுக்குழு. தனது சொந்த மாவட்டமானதஞ்சையில் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கலாமே எல்.ஜி? ஏன் கூட்டவில்லை?

எல்.கணேசன் அரசியல் களம் கண்ட ஓரத்தநாடு நகர செயலாளர் மணி சுரேஷ்குமாரும், ஓரத்தநாடு ஒன்றியச்செயலாளர் ராமைய்யாவும் வைகோ பக்கம்தான் உறுதியாக இருக்கிறார்கள்.

செஞ்சி ராமச்சந்திரனின் சொந்த ஊரான அவியூரில் உள்ள கிளைச் செயலாளரே செஞ்சி ராமச்சந்திரனுக்குஆதரவாக இல்லை. இதுதான் அவர்களது நிலை.

நாளைய கூட்டத்திற்குப் பின்னர் இருவரும் அரசியல் அகதிகள் வரிசையில் சேர்ந்து விடுவார்கள். சீண்டுவார்இல்லாமல் இவர்கள் தவிக்கப் போவதை நாடு பார்க்கப் போகிறது.

சேலத்தில் நாளை ஒரு நகைச்சுவை நாடகம் அரங்கேறப் போகிறது. பொழுது போகாமல் இருப்பவர்கள் அந்தப்பொதுக்குழுவுக்குப் போகலாம். ஒரு வேளை உணவு கொடுப்பார்கள் என்றார் சம்பத்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+