முன்னாள் அமெரிக்க அதிபர் போர்டு மரணம்
கலிபோர்னியா:அமெரிக்க முன்னாள் அதிபர் ஜெரால்டு போர்டு தனது 93வது வயதில்கலிபோர்னியாவில் மரணமடைந்தார்.
அமெரிக்காவின் 38வது அதிபர் போர்டு. குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.வாட்டர்கேட் ஊழலில் சிக்கி அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் பதவி இழந்த பிறகுஅதிபரானவர். ஆனால், இரண்டரை ஆண்டு காலம் தான் அதிபர் பதவியில் இருந்தார். 1976ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயகக்கட்சி வேட்பாளரான ஜிம்மி கார்ட்டரிடம் தோல்வியுற்றார்.
அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலையே அதிக காலம் உயிர் வாழ்ந்தவர்போர்டுதான். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் கலிபோர்னியாவின், ரேங்கோ மிராஜ் என்ற இடத்தில் உள்ள தனதுஇல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு போர்டு மரணமடைந்தார்.
வாஷிங்டனில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள்அஞ்சலிக்காக போர்டின் உடல் கலிபோர்னியாவின் பாம் டெசர்ட், வாஷிங்டன்,கிராண்ட் ரேபிட்ஸ் (இதுதான் அவரது சொந்த ஊர்) ஆகிய இடங்களில் வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே அதிபர் போர்டுமட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவர் துணை அதிபராகக் கூட மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
நிக்ஸன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஸ்பைரோ அக்னியூயும்ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார். இதையடுத்து போர்டு துணை அதிபராகநியமிக்கப்பட்டார். பின்னர் நிக்ஸனும் வாட்டர்கேட் ஊழலில் சிக்கி பதவியிழந்தபோது போர்டு அதிபரானார்.
போர்டு அதிபராக பதவியேற்ற அடுத்த மாதமே, நிக்ஸனை மன்னித்து விட்டுவிடுவதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அறிவித்துஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications