தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது வைகை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:மதுரையிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும்விபத்திலிருந்து தப்பியுள்ளது.
இன்று காலை மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில்,அம்பாத்துரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பொட்னாம்பட்டி என்றஇடத்தில் உள்ள ரயில்வே கேட்டுக்கு அருகே தண்டவாளத்தில் 2 அங்குலம் அளவுக்குவிரிசல் ஏற்பட்டிருந்ததை ரயில்வே ஊழியர்கள் கவனித்தனர்.
இதையடுத்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்அம்பாத்துரையில் நிறுத்தப்பட்டது.
பின்னர் விரிசல் சரி செய்யப்பட்டு, கால் மணி நேர தாமத்திற்குப் பின்னர் வைகைஎக்ஸ்பிரஸ் மீண்டும் கிளம்பிச் சென்றது. கடும் பனிப் பொழிவு காரணமாக விரிசல்ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications