பள்ளிக்கு போன சிறுவன்-சிறுமி கடத்தல்?
சென்னை:சென்னை செங்குன்றம் அருகே பள்ளிக்கூடத்திற்குப் போன சிறுமியும், அவளதுதம்பியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களைப் பிரிந்துவிட்ட தந்தைதான் இருவரையும் கடத்தியிருக்க வேண்டும் என சந்தேகம்எழுந்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் 11 வயது சிறுவன் கடத்தப்பட்டு மிகக் கொடூரமாககொல்லப்பட்ட சம்பவம் சென்னை மக்களை உறைய வைத்துள்ளது. இந்த சோகம்மறைவதற்குள் செங்குன்றம் பகுதியில் பள்ளிக்குப் போன சிறுமியும், சிறுவனும் வீடுதிரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செங்குன்றம் சுப்பிரமணிய பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்குமோனிஷா (வயது 9), தரணி (வயது 7) என இரு குழந்தைகள்.
ஈஸ்வரியின் கணவர் பிரகாஷ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும்ஈஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துசென்று விட்டார்.
காந்தி தெரு பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.மோனிஷாவம், தரணியும் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர்.
புதன்கிழமை மாலை ஈஸ்வரி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது இருகுழந்தைகளும் பள்ளியிலிருந்து வராததை அறிந்து திடுக்கிட்டார். இதனால் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தார். சாலிகிராமம் சிறுவன் கொலை குறித்து அறிந்திருந்தஈஸ்வரிக்கு தனது குழந்தைகள் காணாமல் போனது பெரும் பீதியைக் கிளப்பியது.
ஈஸ்வரி, உறவினர்கள் உள்ளிட்டோர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணாமல்போனவர்கள் குறித்தத் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து செங்குன்றம் காவல்நிலையத்தில் ஈஸ்வரி புகார் கொடுத்தார்.
இதையடுத்து காணாமல்போன குழந்தைகளை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். ஈஸ்வரியின் கணவர் பிரகாஷ் குழந்தைகளை கடத்திச் சென்றிருக்கலாம்என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications