துண்டு துண்டாக வெட்டி, கோணிப் பையில் கட்டி...
டெல்லி:38 சிறுமிகளை கடத்தி வந்து, கற்பழித்து பின்னர் கொன்று துண்டு துண்டாகஉடல்களை வெட்டி புதைத்ததாக டெல்லி அருகே நோய்டாவில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரும் போலீஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம்கொடுத்துள்ளனர்.
டெல்லி அருகே உ.பி. மாநிலத்திற்குள் உள்ள பகுதி நோய்டா. இங்குள்ள 31வதுசெக்டார் பகுதியில் உள்ள மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தான பங்களாவில்ஏராளமான எலும்புக் கூடுகள் சிக்கி டெல்லியை பரபரப்பில் ஆழ்த்தியது.
போலீஸார் இந்த வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியே உள்ள சாக்கடையையும்தோண்டிப் பார்த்தபோது குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் சிக்கின.
இதுதொடர்பாக பங்களா உரிமையாளர் மொஹீந்தர் சிங், அவரது வீட்டுவேலைக்காரர் சுரேந்திரா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அக்கம் பக்கத்தில்உள்ள சிறுமிகளை கடத்தி வந்து கற்பழித்துக் கொன்றது இருவரிடமும் நடத்தப்பட்டவிசாரணையின்போது தெரிய வந்தது.
இதுதொடர்பாக மொஹீந்தர் சிங் போலீஸாரிடம் கொடுத்துள்ள பரபரப்புவாக்குமூலம்:
எனக்கு சிறுமிகளை கற்பழிக்கும் பலவீனம் இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில்உள்ள சிறுமிகளை கடத்தி வந்து கற்பழிப்பேன். பின்னர் அவர்களைக் கொன்று,உடல்களை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் போட்டு வீட்டு வளாகத்தில்புதைத்து விடுவேன்.
சில உடல்களை சாக்குப் பையில் கட்டி சாக்கடையில் வீசி விடுவேன். மொத்தம் 38சிறுமிகளை இவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதைத்தேன். எனக்குசுரேந்திரா உதவியாக இருந்தார் என்று திடுக்கிடும் வாக்குமூலத்தைக் கொடுத்துள்ளார்மொஹீந்தர்.
அவரது வாக்குமூலத்தைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட சாக்கடையை போலீஸார்தீவிரமாக தோண்டி எலும்புக் கூடுகளை எடுத்து வருகின்றனர். சாக்கடையில் மட்டும்15க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன.
தொடர்ந்து எலும்புக் கூடுகள் வந்தவண்ணம் இருப்பதால் இந்த விவகாரம்டெல்லியிலும், உ.பியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு காங். கோரிக்கை:
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனஎதிர்க்கட்சிளான காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் போலீஸ் விசாரணை சீராக போய்க் கொண்டிருப்பதாக கூறியுள்ள உ.பி.முதல்வர் முலாயம் சிங் யாதவ், தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.போலீஸாருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தால் அவர்கள் மீதும்நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications