மாமன் மனைவியுடன் ஓடிய வாலிபர்
நாகர்கோவில்:தனது மாமாவின் மனைவியுடன் கள்ளக் காதல் ஏற்பட்டு அவருடன் வீட்டை விட்டுஓடிய வாலிபரையும், அந்தப் பெண்ணையும் போலீஸார் மீட்டு இருவருக்கும்கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே கிருஷ்ணன் புதூரைச் சேர்ந்தவர் எஸ்ரா. மும்பையில் இவர்வேலை பார்த்து வந்தபோது இவருக்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த ரீனாஎன்பவருக்கும் காதல் ஏற்பட்டு கல்யாணம் நடந்தது.
இருவருக்கும் நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளன. மும்பையிலிருந்து 3ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் புதூர் திரும்பிய எஸ்ரா அங்கு குடித்தனத்தைஆரம்பித்தார்.
ரீனாவுக்குத் தமிழ் தெரியாது என்பதால் தனது அக்காவின் மகன் மனோ சிங்கிடம் (20)அத்தைக்குத் தமிழ் கற்றுக் கொடு என்று கூறியுள்ளார் எஸ்ரா. இதையடுத்து மனோவும்அடிக்கடி வீட்டுக்கு வந்து அத்தைக்குத் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார்.
தமிழ் கற்றுக் கொடுக்கப் போக கடைசியில் ரீனாவுக்கும், மனோவுக்கும் இடையேகள்ளக் காதல் ஏற்பட்டு விட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த எஸ்ராமனோவையும், ரீனாவையும் கண்டித்தார்.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து போலீஸில் புகார்கொடுத்தார் எஸ்ரா. போலீஸாரும் தீவிர வேட்டை நடத்தி இருவரையும் மதுரையில்வைத்து பிடித்தனர்.
சொந்த ஊருக்கு இருவரையும் போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு தனதுமனைவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக எஸ்ரா தெரிவித்தார்.ஆனால் ரீனா அதை ஏற்கவில்லை. தான் இனிமேல் எஸ்ராவுடன் வாழ முடியாதுஎன்று கூறி விட்டார்.
மறுபக்கம், அத்தையுடன் குடும்பம் நடத்தவும், அவரது நான்கு குழந்தைகளை தனதுகுழந்தைகளாக ஏற்று வாழவும் தயாராக இருப்பதாக மனோ சிங் கூறினார்.
மனோவுக்கும், ரீனாவுக்கும் மனோதத்துவ கவுன்சிலிங் கொடுக்க போலீஸார் முடிவுசெய்து அதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களின் பிரச்சினையால் நான்குகுழந்தைகளும் தாயைப் பிரிந்து தந்தையுடன் தவித்து வருகின்றன.
மாமன் மனைவியை கூட்டிக் கொண்டு ஓடிய வாலிபரால் நாகர்கோவிலில் பரபரப்புஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications