கலாம் நாளை தமிழகம் வருகை
சென்னை:2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நாளை சென்னை வருகிறார்.
நாளை இரவு 10.35 மணிக்கு கலாம் திருச்சி வருகிறார். அங்குள்ள அரசினர்விருந்தினர் மாளிகையில் அவர் இரவு தங்குகிறார்.
அடுத்த நாள் காலை அவர் ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் செல்கிறார். அங்குஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில்கலந்து கொண்டு காலை 9.30 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்.
அதை முடித்து விட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவர்அறிவியல் மாநாட்டை கலாம் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் விருதுநகர் செல்கிறார். அங்கு தேசிய கணிதமேம்பாட்டு ஆய்வு மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், நடைபெறும் ஒரிஜின் 2007 என்ற சர்வதேசபயோ டெக்னாலஜி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து மதுரை செல்லும் கலாம் அங்குள்ள மதுரை நாடார் உறவின்முறைஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடலில்பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து டாக்டர் ஜி.வெங்கடசாமி கண் ஆய்வு மையத்திற்கானஅடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அன்று இரவு 7.55 மணிக்கு சென்னை செல்லும் கலாம், சென்னை மாநகரகாவல்துறையின் 150வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியோடு தனது தமிழக பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லிகிளம்புகிறார்.
கலாம் வருகையையடுத்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications