பெரியாறு-மத்திய படையை ஏற்க கேரளா மறுப்பு
திருவனந்தபுரம்:முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்பு படையை ஏற்க மாட்டோம் என கேரளநீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது. அணை பலவீனமாக இருப்பதாகவும் அது மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் பெரியாறு அணையின் தடுப்பு சுவரை சிலர் இடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையைஅனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். (இப்போது அந்தஅணையின் பாதுகாப்பு கேரள போலீஸ் வசம் உள்ளது.)
இதற்கு கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில்,
பெரியாறு அணை கேரள எல்லையில் உள்ளது. அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லை. சட்டம் ஒழுங்குபிரச்சனையும் இல்லை. அப்படி இருக்கு எதற்காக மத்திய பாதுகாப்பு படையை அனுமதிக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் பெரியாறு அணையில் மத்திய பாதுகாப்பு படையை அனுமதிக்க மாட்டோம் என அவர்கூறினார்.
தமிழகம்-கேரள அதிகாரிகள் நேரில் ஆய்வு:
இதற்கிடையே பெரியாறு அணை கைப்பிடி சுவர் சேதப்படுத்தப்பட்டதை தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள்குழு அணைக்கு சென்று அங்கு சேதம் அடைந்த சுவரை பார்வையிட்டனர். பின்னர் அணை குறித்து ஆய்வும்நடத்தினார்கள்.
தமிழக அதிகாரிகள் குழு நடத்திய ஆய்வு அறிக்கையை தேனி மாவட்ட கலெக்டர் ஹர்சாய் மீனா தமிழகஅரசுக்கு அனுப்பவுள்ளார்.
இதே போல கேரள அதிகாரிகள் குழு தங்களது அறிக்கையை கேரளா நீர்வளத்துறை அமைச்சர்பிரேமசந்திரனிடம் கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications