அர்த் கும்பமேளா-20 லட்சம் பேர் குவிந்தனர்

Subscribe to Oneindia Tamil

அலாகாபாத்:அலாகாபாத் நகரத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அர்த் கும்பமேளா திருவிழா தொடங்கியது. இதில் 20லட்சத்துக்கும் மேற்பட்ட பக்கதர்கள் புனித நீராடி வருகின்றனர்.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நிதிகள் சங்கமிக்கும் இடம் தான் திரிவேணி சங்கமம். இதில்சரஸ்வதி என்பது கற்பனையான நதி என்றும், கண்ணுக்கு தெரியாத நதி என்றும் தேலோக நதி என்றும்நம்பப்படுகிறது.

சாதுக்கள், துறவிகள், சித்த புருஷர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்துள்ளனர். கும்பமேளாவுக்குச்சென்றால் பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

குவிந்துள்ள பக்தர்களுக்காக பல்லாயிரம் குடிசைகளும், கொட்டராங்களும் 4,000 ஏக்கர் நிலப்பரப்பில்அமைக்கப்பட்டுள்ளன. இவ்விழா பிப்ரவரி 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

நேற்று தொடங்கிய இந்த விழாவில் புனித நீராடல் முடிந்ததும் பக்தர்கள் படே ஹனுமான் கோயிலுக்கு சென்றுசிறப்பு வழிபாடு செய்தனர்.

கலங்கிய நதி:

கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் நதி நீர் கலங்கலாகவும், துர்வாசனையுடனும் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் ஆற்றின் நீரோட்டமும் குறைவாக உள்ளதால் நதி பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு:

கும்பமேளாவை முன்னிட்டு அலாகாபாத்தில் 20,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டுநிபுணர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ, சுகாதாரக் குழுங்களும், தீயணைப்புபடையினரும், நீச்சல் நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழா பிப்ரவரி 16ம் தேதி வரை நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+