டெல்லியில் காய் நகர்த்தும் வைகோ-கண்காணிக்கும் உளவுப் பிரிவு!
டெல்லி:மதிமுகவின் கொடி, கட்சியின் பெயர், தலைமையகம், பம்பரம் சின்னம் ஆகியவற்றைக் கைப்பற்ற எல்.ஜி-செஞ்சிதரப்பு முயல்வதால் அதை முறியடிக்க டெல்லியில் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ.
எஞ்சியிருக்கும் ஒரே எம்பியான கிருஷ்ணனுடன் டெல்லியில் முகாமிட்டுள்ள வைகோ, தேர்தல் ஆணையத்தில்தானே உண்மையான மதிமுக என்பதை நிரூபிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
வைகோவை கண்காணிக்க தமிழகத்தில் இருந்து உளவுப் பிரிவினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகத்தெரிகிறது.
நேற்று காலை படேல் செளக் அசோகா சாலையில் உள்ள மத்திய தேர்தல் ஆணையத்திற்கு வைகோ சென்றார்.ஆனால், தேர்தல் ஆணையர்கள் மூன்று பேருமே வெளியூர் சென்றுவிட்டதால் ஏமாற்றமடைந்தார்.
இதையடுத்து தென் மாநிலங்களுக்கு பொறுப்பு வகிக்கும் துணை ஆணையர் பட்டாச்சார்யாவின் அலுவலகத்துக்குவைகோ சென்றார். ஆனால், அவரும் வெளியூர் சென்றுவிட்டதாக தகவல் வந்தது.
ஆனாலும் சளைக்காமல் அங்குள்ள அதிகாரிகளை சந்தித்தார் வைகோ. அவர்களிடம், மதிமுகவைப் பிளவுபடுத்தநடக்கும் முயற்சிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசியல் உயர் மட்டக்குழு, செயற்குழுக் கூட்டங்களில்எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார்.
இக் கூட்டங்களின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆவணங்களையும் தந்தார்.
கட்சி பிளவு பட்டதாக கூறி கொடி, சின்னத்தை முடக்குவது மற்றும் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரும் கோரிக்கையையும் ஏற்பது போன்றவற்றை தேர்தல் ஆணையம் செய்யக் கூடாது என வைகோகோரினார்.
மேலும் எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரின் எம்.பி. பதவிகளையும் பறிக்க வேண்டும்என்றும் வைகோ கோரினார்.
இதையடுத்து சில வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய வைகோ, கட்சியை பிளவுபடுத்த திமுக பல கோடிசெலவு செய்வதாக சி.பி.ஐயிடம் புகார் கொடுப்பது குறித்து விவாதித்தாகத் தெரிகிறது.
கோர்ட்டில் ஆஜராக வைகோவுக்கு சம்மன்:
இந் நிலையில் தமிழக அரசு தொடர்ந்து அவதூறு வழக்கில் பிப்ரவரி 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனசென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் வைகோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை கடுமையாக குற்றம் சாட்டிவைகோ பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது தமிழக அரசு வழக்கறிஞர் ஷாஜகான், சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிபிப்ரவரி 15ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்று வைகோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும்அவர் உத்தரவிட்டார்.
ஏற்கனவே திமுக சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கிலும் வைகோவுக்கு சென்னை எழும்பூர் பெருநகரகுற்றவியல் நீதிமன்றம் வைகோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதிமுக பலமாகி விட்டது: கண்ணப்பன்
இந் நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொருளாளர் கண்ணப்பன்,
கருணாநிதி போட்ட கணக்கு தப்புக்கணக்காகி விட்டது. எல்.கணேசனையும், செஞ்சி ராமச்சந்திரனையும்இழுப்பதன் மூலம் கட்சியை உடைத்து விடலாம் என அவர் நம்பியது பொய்த்து விட்டது.
மதிமுகவில் உள்ள 1,414 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,330 பேர் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துபிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனர். கட்சி மீதும், வைகோ மீதும் நம்பிக்கை தெரிவித்து கடிதம்கொடுத்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் யாரை வேண்டுமானாலும் பதவியிலிருந்துநீக்கும் அதிகாரம் வைகோவுக்கு உள்ளது.
எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை.கட்சியின் அதிகாரப்பூர்வ எம்.பிக்களாக அவர்கள் உள்ளதால், வேறு எந்தக் கட்சியிலும் அவர்களால் சேரமுடியாது. பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணனையும் பெரிய தொகை கொடுத்து விலைக்கு வாங்க பார்த்தனர்.ஆனால் அவர் அதற்கு அடிபணிய மறுத்து விட்டார் என்றார் கண்ணப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications