உரக்க சொன்ன கலாம்-அமைதியான போலீஸ்
சென்னை:சென்னை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை ஏற்கவேண்டும் என கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழாவின் நிறைவு நாள்நிகழ்ச்சியில் கலாம், ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலாம் பேசுகையில், தேசிய வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு மிகவும்முக்கியமானது. சிறந்த நிர்வாகம், சிறந்த தொழில் திறன், நவீனமயமாக்கல்ஆகியவற்றின் மூலம் காவல்துறை மேம்பட்டு விளங்க முடியும்.
ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.புகார்களை அதில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய தலைமைஅதிகாரியின் இ-மெயில் முகவரியை மக்களுக்கு தெரியும் வகையில் முறையாகவிளம்பரப்படுத்த வேண்டும்.
நேரில் வந்து புகார் செய்ய அஞ்சுவோர், இ-மெயில் மூலம் புகார்களை ஏற்றுக்கொள்ளும் வசதி இருக்க வேண்டும். 2020ம் ஆண்டில் குற்றங்கள் எப்படி நடக்கும்,பொதுமக்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்துகாவல்துறை செயல்பட வேண்டும்.
லஞ்ச-லாவண்யம் இல்லாமல் போலீஸார் செயல்பட வேண்டும். பெண்களுக்குஎதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுமக்களோடு நட்போடு பழகவேண்டும். போலீசார் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பொதுமக்களின்நம்பிக்கையைப் பெறுவதோடு அவர்களின் இதயங்களில் இடம் பெறும் வகையில்செயலாற்ற வேண்டும் என்றார் கலாம்.
பின்னர் அவர் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை கூறினார்.அதை காவல்துறையினர் திருப்பிக் கூற கேட்டுக் கொண்டார். அதன்படி ஒவ்வொறுஉறுதிமொழியாக கலாம் கூற அதை காவலர்கள் திரும்பிக் கூறினர்.
கலாம் கொடுத்த 9 கட்டளைகள்:
1. ஊழலற்ற வாழ்க்கை வாழ்ந்து அனைவருக்கும் நான் முன்னோடியாக இருப்பேன்.
2. சட்டத்தை மீறிச் செயல்படுவோருக்கு நான் இடியும், மின்னலுமாக இருப்பேன்.சட்டத்தை மதிப்போருக்கு நான் காவலனாக இருப்பேன்.
3. எந்த வகையான குற்றச் செயலாக இருந்தாலும் அதற்கு எதிராக நான் தீவிரமாகவும்,கடமையுணர்வுடனும் செயல்படுவேன்.
4. பாரம்பரியம் மிக்க சென்னை மாநகர காவல்துறையின் ஒரு அங்கமாக இருப்பதில்நான் பெருமை அடைகிறேன்.
5. சென்னை காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்காகபெருமைப்படுகிறேன்.
6. பொது மக்களின் நண்பனாக நான் இருப்பேன்.
7. எங்கும் அமைதி நிலவ பாடுபடுவேன்.
8. அனைவருக்கும் முன்மாதி>யாக நான் இருப்பேன்.
9. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களுக்கு நான் முன்னுதாரணமாகஇருப்பேன் என்றார் கலாம்.
உறுதிமொழிகளை கலாம் சொல்லும்போது குறிப்பாக ஊழலற்ற வாழ்க்கை வாழ்வேன்என்று அவர் சொன்னபோது காவல்துறையினரின் குரல் சற்றே குறைச்சலாக இருந்தது.இதையடுத்து நன்கு உரக்கச் சொல்லுங்கள் என்று ஆசிரியர் போல உரிமையோடுகண்டித்தார் கலாம்.
இதையடுத்து அனைவரும் சத்தமாக உறுதிமொழியைத் திருப்பிக் கூறினர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கலாம் இரவு 10.15 மணிக்கு டெல்லிக்குப்புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications