கட்சியை பலப்படுத்த திமுக-அதிமுக அதி தீவிரம்
சென்னை:திமுக மகளிரணியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் கட்சியில் அதிக அளவில் பெண்களைசேர்க்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஜெ பேரவையை வலுவான அமைப்பாக மாற்றும் வேலையில் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.
அதிமுக தலைவராக இருந்த எம்ஜிஆர் தனது பெயரில் எம்ஜிஆர் மன்றம் ஒன்றையும் நடத்தி வந்தார். அதிமுகநிர்வாகிகளுக்கு இணையான அதிகாரம் இந்த மன்ற நிர்வாகிகளுக்கும் தரப்பட்டது.
அதே போல ஜெயலலிதா ஆரம்பித்தது தான் ஜெ பேரவை. இந்த பேரவை நிர்வாகிகளுக்கு அதிமுகநிர்வாகிகளை விட அதிகமான செல்வாக்கு உண்டு. இதனால் அதிமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்தபேரவையின் பதவிகளைப் பிடிக்க கடும் போட்டா போட்டி நிலவுவது வழக்கம்.
ஆனால் ஆட்சி போய்விட்டால் இந்த பேரவை பதவிகளுக்கு போட்டி இருக்காது. இப்போதும் வழக்கம்போலஜெ பேரவை செயல்பாடு இழந்துள்ளது. இதையடுத்து பேரவையை பலப்படுத்தஉத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
இதற்காக முதல் கட்டமாக சசிகலாவின் அக்காள் மகன் மகாதேவனுக்கு இந்தபேரவையின் தலைவர் பதவி தந்தார். அடுத்ததாக மகாதேவனை தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்ய வைத்து பேரவையையும் கட்சியையும்பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளார்.
நேற்று சிவகங்கை வந்த மகாதேவன் அங்கு பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இன்று ராமநாதபுரத்திலும், நாளை மதுரையிலும் நடக்கும் கூட்டத்தில்கலந்து கொள்கிறார்.
திமுக வியூகம்:
இதற்கிடையே மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு பதவிகள் தந்து அவர்களை அரவணைக்க வேண்டும், மகளிர் அணியை பலப்படுத்த வேண்டும்என திமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலர்கள் மற்றும் உயர்நிலை செயல்திட்ட குழு,நிர்வாகக் குழுக்களின் கூட்டத்தில் போட்டி மதிமுகவை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்வது, மாற்றுக் கட்சியினர் வந்தால் அவர்களுக்கு பதவிகள் வழங்குவது எனதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது.நாம் தான் வீணாக மதிமுகவை வளர்த்து விடுகிறோம். அக்கட்சியைகண்டுகொள்ளாமல் விட்டால் காணாமல் போய் இருப்பார்கள். இதுபோன்றதீர்மானங்களால் அவர்களுக்கு வீணான முக்கியத்துவத்தை நீங்கள் (கருணாநிதி)கொடுக்கிறீர்கள் என்று பேசினாராம்.
ஆனால், அவரை அமைதிப்படுத்திய கருணாநிதி மதிமுக மற்றும் இதர கட்சிகளில்இருந்து வருவோருக்கு கட்சியில் சின்ன பதவியாவது கொடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஒதுக்கப்படுவதாக நினைப்பார்கள் என்றாராம்.
மேலும் தமிழகத்தில் பெரிய கட்சி திமுகதான். ஆனால், அதிமுகவில் நிறையஉறுப்பினர்கள் உள்ளது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி நாடகம் ஆடுகிறார்ஜெயலலிதா.
அதே நேரத்தில் திமுகவில் மகளிர் உறுப்பினர்கள் குறைவாகவே உள்ளனர். எனவே,அதிக அளவில் பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications