சென்னை விமான நிலைய அதிகாரிகளின் திமிர்: பெண்ணிடம் கலாட்டா!
சென்னை:சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த பெண்ணிடமும் அவரது மகளிடமும் மிகவும்கடுமையாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட குடியுரிமை (இமிகிரேஷன்) அதிகாரிகளுக்கு எதிராகவிமான பயணிகள் ஒன்று திரண்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
துபாயில் உள்ள பிரிட்டிஷ் ஆயில் நிறுவனத்தில் அதிகாரிகளாக இருப்பவர்கள் கிளிண்டன், பெத்தேல்தம்பதியினர். அவர்கள் தங்களது மகள் கெல்லி யுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட சென்னை வந்தனர்.
பரங்கிமலையில் உள்ள உறவினர் வீட்டில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி விட்டு பெத்தேலும், கெல்லியும் துபாய்திரும்ப இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர். சனிக்கிழமையன்று டிக்கெட் உறுதிசெய்யப்படாததால், ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் வந்தனர். அவர்களுடன் உறவினர் சரவணனும் வந்தார்.
இரவு 8 மணி விமானத்தில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் குடியுரிமை சோதனைப் பிரிவுக்குபெத்தேலும், கெல்லியும் சென்றனர். பெத்தேலிடம் சோதனை நடத்திய குடியுரிமை அதிகாரி ஒருவர் அவரைகேலி செய்ததாக தெரிகிறது. மேலும் தரக்குறைவாகவும் அவர் பேசியுள்ளார்.
இதையடுத்து பெத்தேல் அதிர்ச்சி அடைந்து அந்த அதிகாரியைக் கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும்இடையே வாக்குவாதம் மூண்டது. பெத்தேலுக்கு ஆதரவாக சக பயணிகளும் குரல் கொடுத்தனர்.
பெத்தேல் திட்டியதால் ஆத்திரமடைந்த குடியுரிமை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், கேலிசெய்த குடியுரிமை அதிகாரிக்கு ஆதரவாக திரண்டனர்.
விமான நிலைய மேலாளர் ஏழுமலையிடம் சென்ற அவர்கள், பெத்தேலை விமானத்தில் ஏற்றக் கூடாது என்றுவலியுறுத்தினர். அவர்களின் மிரட்டல் கலந்த வலியுறுத்தலுக்கு பணிந்த ஏழுமலை, பெத்தேலை விமானத்தில்பயணிக்க அனுமதி மறுத்தார். பெத்தேல், கெல்லியின் உடமைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெத்தேல், போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகவும், இங்கிலாந்துதூதரகத்தில் புகார் செய்து பெரிய பிரச்சினையாக்கப் போவதாகவும் ஆவேசமாக கூறினார். இதனால் பயந்துபோன விமான நிலைய அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து அவர்களை பயணம் செய்ய அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து பெத்தேலும் அவரது மகளும்விமானத்திற்குள் ஏறி அமர்ந்தனர். விமானம் கிளம்ப தயாராக இருந்தபோது, குடியுரிமை அதிகாரிகள் சிலர்விமானத்திற்குள் ஏறி பெத்தேலையும், கிள்ளியையும் வலுக்கட்டாயமாக கீழே இறக்க முயற்சித்தனர்.
பெண் என்றும் பாராமல் குடியுரிமை அதிகாரிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதைப் பார்த்து, விமானத்தில்இருந்த அத்தனை பயணிகளும் ஒன்று திரண்டு குடியுரிமை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பெத்தேலை கீழேஇறக்கினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அனைவரும் கீழே இறங்கி விடுவோம் என ஆவேசமாககூறவே குடியுரிமை அதிகாரிகள் அரண்டு போயினர்.
அதேபோல விமான பைலட், ஏர்லைன்ஸ் ஊழியர்களும் குடியுரிமை அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம்தெரிவித்தனர். இதையடுத்து பெத்தேல், கெல்லியை கீழே இறக்க மாட்டோம் என தெரிவித்து விட்டு திமிர் பிடித்தகுடியுரிமை அதிகாரிகள் விமானத்தை விட்டு இறங்கினர். அதன் பின்னர் சுமார் 4 மணி நேர தாமதத்திற்குப்பின்னர் நள்ளிரவு 12.15 மணிக்கு விமானம் கிளம்பிச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணன் குடியுரிமைத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications