பிள்ளையார் கோவில்-பெரியவர் சிலை சேதம்
சென்னை:சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலையோரம் இருந்த பிள்ளையார் கோவில் சேதப்படுத்தப்பட்டதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
ஐஸ் ஹவுஸ், கிருஷ்ணாம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் கடந்த 30 வருடங்களாக ஒருபிள்ளையார் கோவில் இருந்து வந்தது. இந்தக் கோவில் நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டு, இடிக்கப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்துதம் தமிழக பாஜக பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், தென் சென்னைமாவட்ட பாஜக தலைவர் காஞ்சி ஸ்ரீதர் உள்ளிட்டோர் அங்கு விரைந்தனர்.
கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் அவர்கள் இறங்கினர். போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம்பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
காஞ்சிப் பெரியவர் சிலை சேதம் :
அதே போல பெரியவர் என அழைக்கப்படும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின்சிலையை சென்னையில், விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மைலாப்பூர் லேடி சிவசாமி சாலையில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாதுகா மண்டபத்தில் மறைந்தசங்கராச்சாரியாரின் சிலை உள்ளது. இதற்கு பக்தர்கள் தினசரி வழிபாட்டு நடத்தி வருகிறார்கள்.
சனிக்கிழமை அதிகாலை மண்டபத்திற்கு வந்த சில விஷமிகள் ஜன்னல் கண்ணாடிகளையும், சங்கராச்சாரியார்சிலையையும் சேதப்படுத்தினர். இதனால் பக்தர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.
சமீபத்தில் அயோத்தியா மண்டபத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த நிலையில், சங்கராச்சாரியார் சிலைசேதப்படுத்தப்பட்டதால் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் மெளரியா நேரில் சென்று விசாரணை நடத்தினார். குற்றவாளிகளைப்பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications