ஜெ. மீது வழக்கு: திமுக எம்.எல்.ஏ. எச்சரிக்கை
சென்னை:காவல் நிலையத்திற்குள் புகுந்து ரவுடியை மீட்டுச் சென்றதாக அதிமுக பொதுச் செயலாளர் கூறியிருப்பதுஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். இதற்காக அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றுபுரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு கூறியுள்ளார்.
ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், புரசை தொகுதி திமுக எம்.எல்.ஏ. பாபு, தனது அடியாட்களுடன்ஐ.சி.எஃப் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்த உதயக்குமார் என்கிற ரவுடியைமீட்டுச் சென்றதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர்ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் உதயக்குமார் என்பவரை நான் அடியாட்களுடன் சென்று மீட்டதாககுறிப்பிட்டுள்ளது ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்.
உதயக்குமார் யார் என்றே எனக்குத் தெரியாது. இதுகுறித்து நான் விசாரித்தவரை அப்படிப்பட்ட ஒருவரைஐசிஎஃப் போலீஸார் கைது செய்யவே இல்லை.
கைது செய்யப்படாத ஒரு நபரை எப்படி மீட்க முடியும்? என் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் ஜெயலலிதாஅறிக்கை விட்டிருக்கிறார். இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்பாபு.
சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி பாபு மீது கடும் குற்றச்சாட்டுக்களை வீசியிருந்தது. அதைத் தொடர்ந்து பாபுவை போலீஸார்கைது செய்து அடுத்த சில நிமிடங்களிலேயே வெளியே விட்டு விட்டது நினைவிருக்கலாம். அந்த எம்.எல்.ஏ.பாபு மீதுதான் தற்போது ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications