தேர்தல் மன்னன் வயிற்றுக் கட்சி ரங்கசாமி மரணம்
பெங்களூர்:வயிற்றுக் கட்சி (ஹொட்டே பக்ஷா - ஹொட்டே என்றால் கன்னடத்தில் வயிறு என்று பொருள், பக்ஷே என்றால்கட்சி) என்ற கட்சியின் தலைவரும், அதிக தேர்தல்களில் போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்தவருமானகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கசாமி மரணமடைந்தார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கசாமி 1967ம் ஆண்டு அரசியலில் புகுந்தார். ஹொட்டே பக்ஷா கட்சியைஆரம்பித்தார். அன்று முதல் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு வந்தார். எந்தத்தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றதும் இல்லை, டெபாசிட்டை இழக்கத் தவறியதும் இல்லை.
தனது முதல் தேர்தலில் மறைந்த கர்நாடக முதல்வர் கெங்கல் ஹனுமந்தய்யாவை எதிர்த்துப் போட்டியிட்டுத்தோற்றார். நாடாளுமன்றம் முதல் மாநகராட்சி தேர்தல் வரை எந்தத் தேர்தலையும் அவர் விட்டு வைத்ததில்லை.மொத்தம 86 தேர்தல்களில் போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்தவர் ரங்கசாமி.
74 வயதான ரங்கசாமி கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்ஞாயிற்றுக்கிழமை அவர் பெங்களூரில் மரணமடைந்தார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications