25 பேர் கொடூர கொலை-ஹைதராபாதில் பரபரப்பு
ஹைதராபாத்:ஹைதராபாத் அருகே 25 பேரைக் கொன்றதாக 2 பேர் கொடுத்துள்ள வாக்குமூலத்தால் ஆந்திராவில் பரபரப்புஏற்பட்டுள்ளது.
டெல்லி அருகே நொய்டாவில் மொஹீந்தர் சிங் என்பவரும், அவரது வீட்டு வேலையாள் சுரேந்தரும் சேர்ந்து 38சிறுவர், சிறுமிகளை கொன்று புதைத்து, நர மாமிசம் சாப்பிட்ட செயல் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில் இதேபோன்ற ஒரு பயங்கர செயல் ஹைதராபாத்திலும் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஹைதராபாத் ஹைடெக் சிட்டி அருகே இரு விபச்சாரப் பெண்கள், கற்பழித்து கொடூரமாக கொல்லப்பட்டனர்.அவர்களது தலை கற்களால் பயங்கரமாக அடித்து சிதைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 2 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்தியவிசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இந்தப் பெண்களைப் போலவே 25 பேரை பாலியல் சித்திரவதை செய்து கொன்றுள்ளதாக அந்த இருவரும்தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனத் தெரிய வந்துள்ளது. அவர்கள்விபச்சாரப் பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அப்பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் விபச்சாரிகளுடன் தொடர்புள்ள ஆண்களை குறிவைத்து இந்தக் கொலைகள் நடந்துள்ளன. கொலை செய்த பின்னர் தலையை நசுக்கி அடையாளம் தெரியாதஅளவுக்கு சிதைத்து விடுவது இவர்கள் இருவரின் வழக்கமாம்.
கொல்லப்பட்டவர்கள், முன்னணி கணிணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஐபிஎம், டெல், ஓரக்கிள், கூகுள்உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் வசித்து வந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை 9 பேரின் உடல்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். நொய்டா சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும்மக்கள் மனதிலிருந்து அகலாத நிலையில், ஹைதராபாத் படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பலரை அவர்கள்கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications