தாயகத்தில் குண்டு வீச வைகோ சதி-எல்.ஜி.,செஞ்சி
சென்னை:நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்து மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் குண்டுவீசி அந்தப் பழியை எங்கள் மீது போட வைகோ சதித் திட்டம் தீட்டியுள்ளதாக எல்.கணேசனும், செஞ்சிராமச்சந்திரனும் கூறியுள்ளனர்.
போட்டி மதிமுக விரும்பினால் திமுக கூட்டணியில் இணையலாம், திமுகவில் இணைந்தால் அவர்களுக்குக்கட்சிப் பதவிகளில் போட்டியிட சம வாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னையில் சனிக்கிழமை நடந்த திமுக உயர்மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் இந்த பகிரங்க அழைப்பு குறித்து ஆலோசித்து அடுத்த கட்ட முக்கிய முடிவை எடுக்க தஞ்சையில்இன்று போட்டி மதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்ட மதிமுக செயலாளர் தியாக பாரி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், திமுககூட்டணியில் இணைவது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாங்கள் திமுககூட்டணியில் இணைய திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழு ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு நன்றிதெரிவிக்கிறோம்.
இன்று முதல் திமுக தலைவர், முதல்வர் கருணாநிதி காட்டும் வழியில், அவரது வழிகாட்டுதலின் கீழ்செயல்படுவோம்.
சென்னையில் 10ம் தேதி நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தின்போது தாயகத்தில் வெடிகுண்டுகளை வீசித்தாக்குதல் நடத்தி அந்தப் பழியை எங்கள் மீது போட வைகோ சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
நெல்லையிலிருந்து இதற்காக கூலிப் படையை அவர் வரவழைத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்துஎங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தாக்குதல் மூலம் தனக்கு அனுதாபம் தேடிக் கொள்ள வைகோதிட்டமிட்டுள்ளார்.
எங்களது குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க வைகோவுக்குத் திராணியில்லை. ஆனால் மதிமுகதொண்டர்களை கவரும் வகையில் முதலைக்கண்ணீர் வடித்து நாடகமாடுகிறார்.
மதிமுக தொண்டர்கள் வைகோ பேசுவதை நம்ப வேண்டாம். தாயகம் பக்கம் கூட அவர்கள் எட்டிப் பார்க்கவேண்டாம் என்று கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications