தமிழக அரசின் பொங்கல் கலை விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் பொங்கல் கலை விழா வருகிற 17ம் தேதி சென்னை மெரீனாகடற்கரையில் நடைபெறுகிறது.
கடற்கரையில் உள்ள சாரண, சாரணியர் அலுவலக வளாகத்தில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தவிழாவின்போது தப்பாட்டம், தவில் இசை, ஒயிலாட்டம், தேவராட்டம், கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம்,பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடி, பரதம், பாட்டு, நாதஸ்வர இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழா திடலில் ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை கவின் கலைக் கல்லூ>மாணவர்கள் மெரீனா கடற்கரையில் மணல் சிற்பங்களை உருவாக்கவுள்ளனர்.
ஓவியப் போட்டியில் பொதுமக்களும் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications