தினசரி ஒரு காட்சி- ராமதாஸின் பலே திட்டம்!
திருவள்ளூர்:பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழக திரையரங்குகளில் ஒரு நாளைக்கு ஒரு காட்சிதான்காட்ட வேண்டும் என கட்டுப்பாடு என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
திருவள்ளூரில் பாமக இளைஞர் சங்க மாநாடு நடந்தது. மாநாட்டில் ராமதாஸ்பேசுகையில், இந்த மாநாடு எதற்காக.? இளைஞர்களை நல்வழிப்படுத்தி,ஆக்கப்பூர்வமான பரிசுகளை சொல்லி வழி நடத்தத்தான் இந்த மாநாடு.
தமிழ்நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. நீங்கள் யாரைக் கைகாட்டுகிறீர்களோ அவர்கள்தான் நாட்டை ஆள முடியும். அரசு தரமான கல்வியைத் தரவேண்டும்.
டாடா, பிர்லா, ரிலையன்ஸ் பேரக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே கல்விநாட்டுப்புறக் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். கல்வி கற்ற பிறகு வேலை தரவேண்டும். இதற்காக வேலை கொடு மாநாட்டை நடத்தவுள்ளோம்.
சினிமாவைப் பார்த்து இளைஞர்கள் கெட்டு சீரழிகிறார்கள். நாங்கள் ஆட்சிக்குவந்தால், சினிமாவுக்குக் கட்டுப்பாடு விதிப்போம். தினசரி ஒரு காட்சிதான்.ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 3 காட்சிகள் காட்டலாம்.
வரதட்சணைக் கொடுமையை கடுமையான சட்டத்தால் ஒழிப்போம். வரதட்சணைவாங்க மாட்டோம் என இளைஞர்கள் சபதம் எடுக்க வேண்டும். பாமக ஆட்சியில்எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ஆக இருக்கும்.
பசுமைத் தாயகம் ஒரே நாளில் 1 லட்சம் மரக் கன்றுகளை நட்டு சாதனை செய்துள்ளது.500க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியுள்ளோம்.
பாமக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தனது தொகுதியில் உள்ள ஏரிகுளங்களை தூர் வார சட்டம் கொண்டு வருவோம்.
யாரும் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. குடித்தால் கிழவனாகிவிடுவீர்கள், புகை பிடித்தால் ஆயுள் குறைந்து போய் விடும். இதையெல்லாம்சொல்லத்தான் இந்த மாநாடு என்றார் ராமதாஸ்.
மாநாட்டில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கு வீர வாள்பரிசளிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications