சென்னையில் 189 குழந்தைகள் மாயம்-பாஜக குண்டு
சென்னை:சென்னையிலும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களில் 189 குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகவும்இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசிகையில்,
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
உத்தரபிரதேசம் நொய்டாவில் சிறுமிகள் பாலியியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் சென்னையிலும் 189 சிறுவர், சிறுமிகள் காணவில்லை என போலீசார்தெரிவிக்கின்றனர். இவர்களின் கதி என்ன. இதில் போலீசாரின் விசாரணை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதுகுறித்து விசாரிக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் அனாதை ஆசிரமங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியகுழந்தைகளை பல வெளிநாட்டினர் தத்து எடுத்துச் செல்கின்றனர். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாஜ்பாய் ஆட்சியில்விலைவாசி உயர்வு கட்டுபாட்டில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் இல்லை.விலை உயர்வை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை.
பாஜக ஆட்சியில் விலை உயர்ந்தாலும் அதன் பலன்கள் விவசாயிகளை போய் சேர்ந்தது. ஆனால் காங்கிரஸ்ஆட்சியில் விலை உயர்வால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து மக்களிடம்விழிப்புண்ர்வு ஏற்படுத்த பாஜக சார்பில் அடுத்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்தமுடிவு செய்து நடத்தி வருகிறோம். வரும் 13ம் தேதி சென்னையில் முரளி மனோகர் ஜோஷியும், நாகர்கோவில்21ம் தேதி ராஜ்நாத்சிங்கும் பேசுகிறார்கள்.
கோவில்களுக்கு முன் பெரியார் சிலைகள் வைக்க கூடாது. மேலும் சிலைகளின் கீழ் உள்ள கடவுள் இல்லை,கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்ற வாசனங்கள் நீக்கப்பட வேண்டும். இதற்கு வன்முறை தேவையில்லை,மக்கள் மூலம் தீர்வு காண வேண்டும்.
பொங்கல் விழாவை சமூக பாதுகாப்பு விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வர் கருணாநிதிஅறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கலை எல்லா மதத்தினரும் கொண்டாட முன் வர வேண்டும்.தமிழ் புத்தாண்டும் பாரத்தின் கலாச்சரம் தான் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications