தா.கி. கொலை வழக்குக்கு சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி:முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரை நீதிமன்றம் விசாரிக்கஉச்சநீதிமன்றம் இட்ைக்காலத் தடை விதித்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு மதுரை அண்ணா நகரில் அதிகாலையில் ஒரு கும்பலால்தா.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியஇந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிஉள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் தற்போது ஜாமீனில்விடுதலையாகியுள்ளனர்.
இந்த வழக்கு மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்தநிலையில், இவ்வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சாட்சிகளில்ஒருவரான முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் அசோக் பான், லோகேஷ்வர் சிங் ஆகியோரது முன்னிலையில் இம்மனுநேற்று விசாரைணக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் ரஞ்சித் குமார்ஆஜராகி வாதிடுகையில், தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணை தமிழகத்தில்நடந்தால் நியாயம் கிடைக்காது.
எனவே வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மதுரை அமர்வுநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுவாதாடினார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டல் ஜெனரல் மோகன்எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அசோக் பான், மதுரை கோர்ட்நீதிபதி, மு.க.அழகிரி மீது 3 புகார்களைக் கூறி அதன் மீது முதல் தகவல் அறிக்கையும்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி இருந்தால் எப்படி நியாயமாக வழக்கு நடைபெறும் என கருத முடியும்?என்று கேட்டார். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள்,மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துஉத்தரவிட்டனர்.
மேலும் இதுதொடர்பாக மு.க.அழகிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர், தமிழகஅரசு மற்றும் சாட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications