சென்னையில் மலேசிய கார் தொழிற்சாலை
சென்னை:மலேசியாவைச் சேர்ந்த நாசா மோட்டர்ஸ் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 1,575 கோடி செலவில் கார்தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அந் நாட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீசாமிவேலுதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 1,575 கோடி செலவில் கார் தொழிற்சாலையை அமைக்க தமிழகமுதல்வரிடம் பேசிய மூன்றே நாட்களில் அனுமதி மற்றும் தொழிற்சாலை அமைவதற்கான இடம் ஆகியவைஉடனடியாக வழங்கப்பட்டுவிட்டன.
தமிழக அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் மிகவும் சிறப்பாகவும் வேகமாகவும் இயங்கி வருகிறது. கார் தொழிற்சாலைஅமைப்பதற்கான முதல் கட்டமாக ரூ. 675 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. 180 ஏக்கர் நிலப்பரப்பில்அமைய உள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் 1,200 பேருக்கு வேலை கிடைக்கும்.
இங்கு தயாரிக்கப்படும் கார்கள், நடுத்தர மற்றும் சாதாரண மக்களும் வாங்கக்கூடிய விலையில் இருக்கும்.இதற்கான நடைமுறைகள் இந்த மாத இறுதியில் முடியும் கட்டுமானப் பணிகள் இன்னும் 3 மாதங்களில்தொடங்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிந்துவிடும்.
கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை ஒரளவு பொருத்தி ஏற்கனவே தயார் நிலையில்வைத்திருந்து அவற்றை இணைத்து கட்டிடங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் மலேசியாவில் உள்ளது. இதனைதமிழகத்தில் அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.
அதேபோல எஃகை அடிப்படையாக கொண்டு கட்டிடங்களை விரைவாகக் கட்டும் தொழில்நுட்பமும்மலேசியாவில் உள்ளது. இவை தொடர்பான தொழில்களைத் தமிழகத்தில் தொடங்க மலேசியா ஆர்வமாகஉள்ளது.
இந்தியாவில் இருந்து கடந்த 2005-2006ம் ஆண்டுகளில் மட்டும் 21 சதவீதம் மலேசியா தனது கார்களைஏற்றுமதி செய்துள்ளது. இந்தாண்டு இது இரண்டு மடங்காக அதிகாரிக்கும் என நம்புகிறேன். கூட்டு வர்த்தகத்தில்இந்தியாவும், மலேசியாவும் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications