ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை
டோக்கியோ:ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
![]() |
வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்துஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டது.ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஜப்பானின் வட கிழக்கு கடல் பகுதியை 1 மீட்டர் உயரம கொண்ட சுனாமி தாக்கலாம் எனஜப்பானிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
மேலும் தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் கடலின் சில தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதைத் தவிர மேலும் அலாஸ்கா, ஹவாஸ் தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்தது.
இதற்கிடையே சிறிய அளவிலான சுனாமி அலை ஜப்பானின் ஹோக்கைடோ தீவுப் பகுதியை தாக்கியுள்ளது.ஆனால், இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந் நிலையில் இனிமேல் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அந்த எச்சரிக்கை வாபஸ்பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!













Click it and Unblock the Notifications