இட ஒதுக்கீடு- மக்களை ஏமாற்றும் ஜெ.: கருணாநிதி சாடல்
சென்னை:69 சதவீத இட ஒதுக்கீடு வரக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டுள்ள ஜெயலலிதா, அந்த இடஒதுக்கீடுக்கு என்னால்தான் ஆபத்து வந்து விட்டதாக நாடகமாடுகிறார் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டத் திருத்தங்களும், உச்சநீதிமன்றத்தின்பரிசீலனைக்கு உட்பட்டவையே என்றும், அடிப்படை உரிமையை மீறுவதாக இருந்தால் அவை நீதித்துறையின்பரிசீலனைக்கு உட்பட்டே தீர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் அரசியல் சட்டத்தின் 9வது பிரிவில் சேர்க்கப்பட்ட அனைத்துச் சட்டத் திருத்தங்கள் பற்றியும், நீதித்துறைபரிசீலிக்கலாம். தமிழகத்தைப் பொருத்தவரையில், 9வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள இட ஒதுக்கீடு சட்டம்பற்றி பிரச்சினை வரக் கூடும் என்ற வகையில், அதுபற்றி தமிழகத்திலே அனைத்துக் கட்சித் தலைவர்களும் அந்தத்தீர்ப்பு வரவேற்கத்தக்கதல்ல என்ற முறையில் கருத்து தெரிவிக்கும்போது;
தமிழ்நாட்டின் சாபக் கேடாக, இட ஒதுக்கீடு கூடாது என்று மனதளவில் கருதிக் கொண்டு, மக்களைஏமாற்றுவதற்காக இட ஒதுக்கீட்டில் அக்கறையுள்ளது போல காட்டிக் கொண்டு வருகிற ஜெயலலிதா,உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தேவையில்லாமல் மத்திய அரசையும், திமுக அரசையும் காரணம் கூறி தனதுஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலேயே புகழ் பெற்ற முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி, சொலிசிட்டர் ஜெனரலாகஇருந்த அந்தி அர்ஜூனா, சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜேட்மலானி ஆகியோர் தமிழக திமுக அரசு சார்பில்நியமிக்கப்பட்டு இவ்வழக்கில் வாதாடியிருக்கிறார்கள்.
ராம்ஜேட்மலானி வாதிடுகையில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு பற்றி நாங்கள் இப்போதுவிவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போவதில்லை. கருத்தும் கூறப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்உறுதிமொழி கூறியிருக்கிறார்கள்.
3 நீதிபதிகள் அடங்கிய குழுதான் அதை முழுமையாக ஆய்வு செய்து பரிசீலித்து முடிவு அறிவிக்கும் என்றுஉசத்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டிதான் நான் விடுத்த அறிக்கையில், அதுவரைபொறுத்திருப்போம் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால் உச்சநீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பை வைத்துக் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக அரசுமீது பழி போட முனைந்ததோடு, அதற்காக நான் பதவி விலக வேண்டும் என்றும் அறிக்கை விடுகிறார்.
எப்படியாவது நான் பதவி விலக வேண்டும். மீண்டும் ஒரு முறை தேர்தல் வந்தால் தன்னிடம் இருக்கிறகோடிக்கணக்கான ரூபாயை வைத்துக் கொண்டு பதவிக்கு வந்து விடலாமா என்ற நப்பாசையில்தான்இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார்.
இட ஒதுக்கீடு குறித்து பேச அவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு அவர்கல் எறிய முற்படலாமா? இட ஒதுக்கீட்டில் அவர் சறுக்கி விழுந்த நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தவா?
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் குழு பரிந்துரைகளையொட்டி நாடாளுமன்றத்தில் நம்பிக்கைகோரும் தீர்மானத்தை 1990ல் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தை எதிர்த்தது ஜெயலலிதா தலைமையிலானஅதிமுக
இட ஒதுக்கீடு பிரச்சினையில் திமுகவையும், பாமகவையும் திகவையும் குறை கூறி நீண்ட அறிக்கை விடுத்துள்ளஜெயலலிதா, இட ஒதுக்கீட்டில் சாதி அடிப்படை கூடாது, பொருளாதார அளவுகோலே வேண்டும் என்றும்இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு 1990ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பேட்டியே கொடுத்துள்ளார்.
அதே ஜெயலலிதா, இன்றைய அறிக்கை மூலம் அதே கருத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதாவின்உண்மையான உள்ளக் கிடக்கை என்பது 90ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியிலேயே வெளிச்சத்திற்ககு வந்துவிட்டது. அதே உள்ளக் கிடக்கையைத்தான் இப்போதும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் சொல்லப் போனால், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பாக தி.க. தலைவர் கி.வீரமணிவற்புலுத்தலின் பேரில் 1993ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் பற்றிய விளக்கத்தை 1994ம் ஆண்டுஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பத்குமார் வழக்கின்போது சுட்டிக் காட்டத் தவறியதால்தான் இன்றளவும் இடஒதுக்கீட்டை நேரடியாக 60 சதவீதம் அளவுக்கு அதிகாரப்பூர்வமாக நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளதுஎன்பதை அப்படியே மறைத்து விட்டு தமிழக மக்களை இன்னமும் ஏமாற்றலாம் என ஜெயலலிதா காணும் கனவுநிச்சயம் பலிக்காது.
2006, அக்டோபர் 9ம் தேதியன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்வழிகாட்டும் தலைவர் சோனியா காந்திக்கும் நான் எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடுபிரச்சினை குறித்த வழக்கில் மத்திய அரசு தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், 13 நீதிபதிகள்அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
இந்தக் கடிதத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தக்க தொடர் நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளதாகசோனியா காந்தி 13.10.2006 அன்று எனக்குப் பதில் எழுதியுள்ளார்.
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம், 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பளித்தபோது,பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாத்திட அவசர நடவடிக்கைகளைஉடனடியாக எடுத்திட முன் வாருங்கள் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன்.
கடந்த ஆண்டு மட்டுமல்ல, 1993ம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே, அனைத்து மாநிலமுதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
இப்படி இருக்க, முன்னாள் முதல்வர், மத்திய அரசையும், தமிழக அரசையும் குற்றம் சாட்டி அறிக்கைவிட்டிருப்பது ஊரை ஏமாற்றத்தான் என்பதையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் நன்றாகஉணர்ந்துள்ளனர்.
இதுபோன்ற அறிக்கைகளை உள்நோக்கத்தோடு வெளியிட்டு அதிலே அரசியல் லாபம் தேட முயலும்ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications