ஓமலூர் பள்ளியில் இன்னொரு மாணவி மாயம்!
சேலம்:சேலம் அருகே உள்ள ஓமலூரில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பாத்திமாக மகளிர்மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த இன்னொரு மாணவியைக் காணவில்லை.இதனால் ஓமலூரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமலூர் பாத்திமா மகளிர் மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் பிளஸ்டூ படித்துவந்த சுகன்யா என்ற மாணவி சமீபத்தில் மர்மமான முறையில் கிணற்றில் இறந்துகிடந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஊர் மக்கள் ஒன்று திரண்டு பள்ளிக் கூடத்தைசூறையாடினர். இந் நிலையில் அப்பள்ளியின் விடுதியில் தங்கி 8ம் வகுப்பு படித்துவரும் பிரியங்கா என்ற 13 வயது மாணவியை கடந்த 2 நாட்களாக காணவில்லை.
அரையாண்டுத் தேர்தவில் அவர் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்ததால்,பெற்றோரை அழைத்து வரும்படி பள்ளி நிர்வாகம் அவருக்கு உத்தரவிட்டிருந்ததாம்.
இதையடுத்த பெற்றோருக்கு தகவல் கொடுத்து விட்டு பள்ளிக்குத் திரும்பினார்பிரியங்கா. ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை. பிரியங்கா போன் செய்ததைத்தொடர்ந்து அவரது தந்தை ரவி பள்ளிக்கு வந்தார்.
ஆனால் மகளைக் காணவில்லை என்பதை அறிந்த ரவி அதிர்ச்சி அடைந்து போலீஸில்புகார் கொடுத்தார். ஓமலூர் போலீஸார் காணாமல் போன பிரியங்காவை தீவிரமாகதேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
சுகன்யா சம்பவத்தின் பதட்டம் இப்போதுதான் குறைந்துள்ள நிலையில் அதேபள்ளியில் படித்து வரும் இன்னொரு மாணவியும் காணாமல் போயுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
மாணவி சுகன்யா மதிப்பெண் குறைந்த காரணத்தால்தான் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications