காணும் பொங்கல்: மெரீனாவில் ஜனக் கடல்!
சென்னை:காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் குவிந்ததால் சென்னை மெரீனா கடற்கரை ஜன சமுத்திரமாக மாறிக்காணப்படுகிறது.
பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான இன்று காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்துஇன்று காலை முதலே சென்னை நகர மக்கள் கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு ஸ்தலரங்களிலும், தீம்பார்க்குகள் உள்ளிட்ட இடங்களிலும் குவியத் தொடங்கினர்.
குறிப்பாக மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை எனஎங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருக்கிறது.
இதுதவிர விஜிபி, கிஷ்கிந்தா, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் மக்கள்வெள்ளம் அலை மோதுகிறது.
மேலும் மகாபலிபுரத்திலும் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
திருச்சியில் முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் மக்கள் அலை மோதுகின்றனர். காவிரிக் கரையோரமும் மக்கள் கூடிகுடும்பத்தோடும், உற்றார், உறவினர்கள், நண்பர்களோடு காணும் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காணும் பொங்கல், கனி காணும் நாளாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் பூஜைஅறையில் பல வாழைக் கனிகளை வைத்து அவற்றைப் பார்த்தால் இந்த ஆண்டு முழுவதும் சுபிட்சமாக இருக்கும்என்பது நம்பிக்கை.
கடற்கரைகளில் அதிக அளவு மக்கள் கூடியுள்ளனர் என்பதால் தடுப்புகளை ஏற்படுத்தி போலீஸார் பாதுகாப்புநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரீனாவில் 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications