கூட்டணி வேணுமா?-கேப்டன் கண்டிஷன்!
சென்னை:என்னைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று தேமுதிக தலைவர் நடிகர்விஜயகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆ>ன் பிறந்த நாளையொட்டி கோயம்பேட்டில் தனது ஆண்டாள் அழகர் திருமணவளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு விஜயகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக, தேமுதிக, பாஜக கூட்டணி வைக்க வேண்டும் எனசோ சொல்லியிருப்பது அவரது கருத்து. நாங்கள் யாருடனும் போக வேண்டிய அவசியம் இல்லை.
அரசியலில் மாற்றங்கள் வரலாம். ஆனால் நான் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனதுதலைமையை ஏற்றுக் கூட்டணிக்கு வர விரும்புபவர்களை ஏற்க நான் தயார், வரவேற்கத் தயார்.
தேமுதிகவின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. கட்டுக்கோப்பாக இருக்கிறது. சில இடங்களில் சில கட்சிகளின்தூண்டுதலால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடக்கின்றன. அதை சரி செய்து விடுவோம்.
கட்சி ஆரம்பிப்பவர்கள் திராவிடர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கூற முடியாது. எம்.ஜி.ஆர்.திராவிடர் இல்லையா? இன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுகிறார்கள்.
நான் எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்ல ஆரம்பித்தவுடன்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆர்பெயரையே சொல்ல ஆரம்பித்தனர். இடையில் அவர்கள் எம்.ஜி.ஆரை மறந்து போயிருந்தார்கள்.
ரேஷன் அரிசி கடத்தலை அரசு நினைத்தால் தடுக்க முடியும். அவர்கள் நினைத்தால் சாதிக்கலாம். மாநகராட்சித்தேர்தலில் 155 வார்டுகளிலும் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நினைத்தது போல அத்தனைவார்டுகளிலும் வெற்றி பெற்றார்கள்.
அதோபால இப்போது ரேஷன் அரிசி கடத்தலையும் தடுக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால் சாதிக்கலாம்.
இலவச கேஸ் அடுப்புத் திட்டம் குழப்பமாக உள்ளது. அடுப்பு தருகிறார்கள். கேஸ் கனெக்ஷன் வாங்க முன்பணமும் தருகிறார்கள். ஆனால் தொடர்ந்து கேஸ் பெறுவது என்பதற்கு திட்டம் இல்லை. இப்படியே அடுத்ததேர்தல் வரை இழுத்துக் கொண்டிருப்பார்கள் என்றார் விஜயகாந்த்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications