இந்தியா-மே.இ. மோதல்-99ல் கங்குலி அவுட்
நாக்பூர்:இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள்கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இப்போட்டி தூர்தர்ஷனில் நேரடியாகஒளிபரப்பு செய்யப்படாததால் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள்ஏமாற்றமடைந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இருஅணிகளுக்கும் இடையே நான்கு ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள்அணியின் கேப்டன் பிரையன் லாரா இந்தியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து கெளதம் கம்பீரும், செளரவ் கங்குலியும் பேட்டிங்கைத் தொடங்கினர்.கிட்டத்தட்ட 1 வருட இடைவெளிக்குப் பின்னர் ஒரு நாள் போட்டிகளுக்குத்திரும்பியுள்ள கங்குலி தனது அபார ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். கம்பீர் ஆரம்பம் முதலே அடித்து ஆடத் தொடங்கினார். கங்குலி நிதானமா ஆட்டத்தைதொடங்கினார்.
99 ரன்னில் அவுட் ஆன கங்குலி:
தொடக்கத்தில் நிதானமாக ஆடத் தொடங்கிய கங்குலி போகப் போக வேகம் பிடித்து வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார். அவருக்கு முன்பாக கம்பீர் முதல்பந்திலிருந்தே பின்னி எடுத்து வந்தார்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கம்பீர் ஆட்டமிழந்தார். அவர் போன பின்னர் சச்சின் களம் இறங்கினார். அவரும் வந்தது முதலே அடித்து ஆடத் தொடங்கினார்.ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மறு முனையில் கங்குலி அடித்து ஆடத் தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் சதம் அடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால், 99 ரன்கள் எடுத்த நிலையில், ஒரு ரன் எடுக்கப் போய் பரிதாபமாக ரன் அவுட் செய்யப்பட்டார் கங்குலி. அப்போது அணியின் ஸ்கோர் 3விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஆக இருந்தது.
இதுவரை இரு அணிகளும் மொத்தம் 86 போட்டிகளில் சந்தித்துள்ளன. அதில் மேற்குஇந்தியத் தீவுகள் அணி 62 போட்டிகளிலும் இந்தியா 22 போட்டிகளிலும்வென்றுள்ளன. இந்தியாவில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டிகளிலும்மேற்கு இந்தியத் தீவுகள் அணிதான் அதிக போட்டிகளில் (22) வென்றுள்ளது. இந்தியா12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நாக்பூர் மைதானம் ரன்கள் குவிக்க சாதகமானதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவேஇந்திய மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகளின் அதிரடி பேட்ஸ்மென்களிடமிருந்துரன் விருந்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.
தூர்தர்ஷனில் லைவ் கிடையாது:
இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் உரிமையை மும்பையைச்சேர்ந்த நிம்பஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில்தொடங்கப்பட்டுள்ள நியோ ஸ்போர்ட்ஸ் சானலில் போட்டி நேரடியாக ஒளிபரப்புசெய்யப்படவுள்ளது.
போட்டியை ஒளிபரப்பும் உரிமையை தங்களுக்கும் தர வேண்டும் என தூர்தர்ஷன்மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை கோ>ன. ஆனால் அதற்கு நிம்பஸ் மறுத்துவிட்டது.
நிம்பஸ் விதித்த நிபந்தனைகளை தூர்தர்ஷன் ஏற்காததால் நேரடியாக ஒளிபரப்புச்செய்யும் உ>மையை வழங்க நிம்பஸ் மறுத்து விட்டது.
இதுகுறித்து நிம்பஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஹஙுஷ் தவான் கூறுகையில்,பிரசார் பாரதி நிபந்தனை விதிக்கிறது. அதை எங்களால் ஏற்க முடியாது. போட்டியைஒளிபரப்பும் உரிமையை பகிர்ந்தளிக்கவும் முடியாது.
எங்களை கட்டாயப்படுத்தினால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்றார்.இந்தியாவின் பல நகரங்களில் செட் டாப் பாக்ஸ் முறை அமலில் உள்ளது. எனவேசென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் இலவச சான்லகளை மட்டுமேஇலவசமாக பார்க்க முடியும். கட்டணச் சானல்கள் அவர்களுக்குத் தெரியாது.
எனவே இந்தப் போட்டியை பார்க்க முடியாத நிலை பல லட்சம் கி>க்கெட்ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications