மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட தடை நீக்கம்
சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிட விதிக்கப்பட்டிருந்ததடையை நீக்கும் சட்டத் திருத்தம் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படிசென்னை மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு ஒருவரே மீண்டும்போட்டியிட தடை விதிக்கப்பட்டது.
ஆனால் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில்மேயர், துணை மேயர் பதவிக்கு மீண்டும் போட்டியிடலாம் என அந்த சட்டத்திருத்தத்தில் தெ>விக்கப்பட்டிருந்தது.
இந்த பாரபட்சத்தை நீக்கும் பொருட்டு இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்,சட்டசபையில் ஒரு திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது ஸ்டாலின் பேசுகையில், கடந்த 2005க்கு முன்பு இருந்ததைப் போலசென்னை மாநகராட்சியில் மாதம் ஒருமுறை மாமன்றக் கூட்டம் கூட்டப்படும். கடந்தஅதிமுக ஆட்சியில் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடைபெறும் என்ற நடைமுறைரத்து செய்யப்படுகிறது.
சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் ஒருவரே மீண்டும்போட்டியிட இருந்த தடை நீக்கப்படுகிறது. இனி அனைத்து மாநகராட்சிகளிலும்மேயர், துணை மேயர் பதவிக்கு ஒருவரே மீண்டும் போட்டியிடலாம்.
அடுத்தடுத்து 3 முறை மாமன்றக் கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களை தகுதி நீக்கவும்சட்டத் திருத்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது என்றார். பின்னர் இந்த திருத்த மசோதாநிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலின் மீண்டும் மேயர் பதவிக்கு வருவதைத் தடுக்கும் வகையிலேயே கடந்தஅதிமுக ஆட்சியில் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டத் திருத்தத்தைஅதிமுக அரசு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை மாநகராட்சியில் சர்ச்சைக்குள்ளான 98 கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்துள்ள நிலையில், மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த மா.சுப்பிரமணியன்மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விரைவில் மாமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு மேயரின் ராஜினாமாகடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications