அரசு வசம் கேபிள் டிவி-புதுவை திமுக கோரிக்கை
புதுச்சேரி:தமிழகத்தில் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு திமுக கடும் எதிர்ப்புதெரிவித்த நிலையில் புதுவையைச் சேர்ந்த தி.க கவுன்சிலர் ஒருவர் கேபிள் டிவி நிறுவனங்களை அரசேகையகப்படுத்த வேண்டும் என அம்மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுவையைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் நந்தா கலைவாணன் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தின் ஒவ்வொருபகுதியிலும் ஒரு மாதிரியான கட்டணத்தை கேபிள் டிவிகாரர்கள் வசூலிக்கின்றனர். சில இடங்களில் 200 ரூபாய்வரை வாங்குகிறார்கள்.
எத்தனை இணைப்புகளை தாங்கள் வைத்துள்ளோம் என்ற விவரத்தை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசுக்குத்தருவதில்லை. இதைக் கூறாமல் வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
எனவே மாநிலம் மழுவதும் ஒரே கட்டணத்தை வசூலிக்க ஆபரேட்டர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.அதற்கு அவர்கள் ஒத்து வராவிட்டால் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே கையகப்படுத்த வேண்டும். இதனால்அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்றார் நந்தா.
தமிழகத்தில் கேபிள் டிவி சட்ட மசோதாவை கடந்த அதிமுக ஆட்சி சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்குஅனுப்பி வைத்தது. இதையடுத்து உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு விரைந்து சென்ற திமுக தலைவர்கருணாநிதி, இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
மேலும், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கேபிள் டிவி சட்ட மசோதா கைவிடப்படுவதாகவும்அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் புதுவையில் கேபிள் டிவி நிறுவனங்களை அரசுகையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திமுகவிலிருந்தே எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications