ஆடிட்டர்: மனுவை வாபஸ் பெற்ற ஜெயேந்திரர்
டெல்லி:ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கை தமிழகத்திலிருந்து வேறுமாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஜெயேந்திரர்வாபஸ் பெற்றார்.
சென்னையில் சங்கர மட பக்தர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணனும், அவரது மனைவியும்வீடு புகுந்து ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயயேந்திரர் மீதுஅதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கை வெளி மாநிலத்திற்கு மாற்றியதைப்போல இந்த வழக்கையும் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி இந்தவழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயேந்திரர்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா ஆட்சியில் தனக்கு நீதி கிடைக்காது என ஜெயேந்திரர் தனது மனுவில்கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாத்தூர் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், இரு வழக்குகளும் வேறு வேறானவை. மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்(ஜெயலலிதா ஆட்சி போய்விட்டது) ஏற்பட்டுவிட்ட நிலையில் ஜெயேந்திரரின் மனுஅர்த்தமில்லாததாகிவிட்டது என்றனர்.
இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என ஜெயேந்திரரின்வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். இதையடுத்து அந்த மனுவாபஸ் பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து விரைவில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications