ஆசிரியைக்கு பளார்! 3 மாணவர்கள் கைது
சென்னை:படித்த பள்ளிக்கூடம் மீது கல்வீசி ரகளை செய்த 3 மாணவர்களை கண்டித்தஆசிரியையின் கன்னத்தில் அவர்கள் அறைந்தனர். அந்த 3 முன்னாள்மாணவர்களையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை விருகம்பாக்கம் ஏவி.எம் காலனியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிஉள்ளது. இப்பள்ளியில் கடந்த 17ம் தேதி சிலர் கல்வீசி ரகளை செய்தனர்.
இதையடுத்து ஆசிரியை ஆனி (வயது 54) வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது3 பேர் குடிபோதையில் கல்வீசித் தாக்கியது தெரிய வந்தது.
அவர்களில் சம்பத்குமார், நரேந்திர குமார் ஆகிய இரு இளைஞர்களும் அதேபள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள். இன்னொருவரான ஜோசப் வேறுபள்ளியில் படித்தவர்.
முன்னாள் மாணவர்களே இவ்வாறு செய்வதைப் பார்த்து அதிர்ந்த ஆசிரியை ஆனி,அருகில் சென்று இது நீங்கள் படித்த பள்ளி, உங்கள் வீட்டின் மீதே இப்படி கல் வீசிஅசிங்கப்படுத்தலாமா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு கோபமடைந்த 3 பேரும் ஆசிரியை ஆனியின் கன்னத்தில்அடித்துள்ளனர். இதை எதிர்பாராத ஆசிரியை ஆனி அதிர்ச்சியில் தலை சுற்றி மயங்கிசுவரைப் பிடித்து சிறிது நேரம் நின்று விட்டார்.
பின்னர் பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் விரைந்து வந்து அவரை உள்ளேஅழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஆனி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 3இளைஞர்களையும் கைது செய்தனர். இவர்களில் நரேந்திரகுமார் பி.காம் படித்துவருகிறார். மற்ற இருவரும் வீட்டில் சும்மா இருக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications