ஏர்-பார்சலில் துப்பாக்கி: பெண்ணுக்கு வலைவீச்சு
சென்னை:ஆஸ்திரேலிய முகவரிக்கு அனுப்பப்பட்ட ஏர்கன், துப்பாக்கி தோட்டாக்கள், பட்டாசுகள் அடங்கிய பார்சல்சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அனுப்பிய கல்லூரி மாணவியை போலீஸார்தேடி வருகின்றனர்.
சென்னையிலிருந்து ஆஸ்திரேலிய முகவரிக்கு, விமானத்தில் அனுப்புவதற்கு ஒரு பார்சல் ஸ்பீட் போஸ்ட் மூலம்அனுப்பப்பட்டிருந்தது. இந்த பார்சலை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் ஸ்கேன் செய்துபார்த்தபோது அதில் வெடிபொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர்முன்னெச்ச>க்கையுடன் பார்சல் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு ஏர்கன், 40 துப்பாக்கித் தோட்டாக்கள், அதிக சக்திவாய்ந்த பட்டாசுகள் இருந்தன.
இந்த பார்சல் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கல்லூரி மாணவி அனுப்பியுள்ளா. அங்குசென்று போலீஸார் விசாரித்தபோது அந்த மாணவி 2 நாட்களுக்கு முன்பே அறையைக் காலி செய்து விட்டுச்சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மாணவியை தேடிக் கண்டுபிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
துப்பாக்கி தோட்டாவுடன் வந்த பயணி:
இதற்கிடையே, .22 மி.மீ. துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கித் தோட்டாக்களுடன் விமானம் ஏற வந்த பயணியை பாதுகாப்புப் படையினர்கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர்.
டெல்லியைச் சேர்ந்த வியாபாரியான ஏ.கே.பாண்டே என்பவர் இன்று காலை டெல்லி செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக சென்னை காமராஜர்உள்நாட்டு முனையத்திற்கு வந்தார்.
அவரது சூட்கேஸ் சோதனையிடப்பட்டபோது 6 ரவுண்டு சுடக் கூடிய .22 மி.மீ. துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன.
இதையடுத்து அந்தப் பயணியை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது கவனக்குறைவாக துப்பாக்கிக் குண்டுகள் தனதுசூட்கேஸுக்குள் வந்து விட்டதாக பாண்டே தெரிவித்தார்.
மேலும் தனது துப்பாக்கி லைசன்ஸ் குறித்த ஆவணங்களையும் அவர் வழங்கினார். இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பாண்டேவை பயணிக்கஅதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் கால் மணி நேரம் தாமதமாக விமானம் டெல்லி கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications