பள்ளி மேற்கூரை இடிந்து 25 குழந்தைகள் காயம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் தனியார் நர்சரி பள்ளிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில்25 குழந்தைகள் காயமடைந்தனர்.
திருக்கோகணம் பகுதியில் ஒரு தனியார் நர்சரிப் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி.ஆகிய வகுப்புகள் ஓட்டுக் கொட்டகையின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தஓடுகள் நீண்ட காலத்திற்கு முன்பு போடப்பட்டவையாகும்.
திங்கள்கிழமை திடீரென ஓட்டுக் கொட்டகையை தாங்கி நின்ற மூங்கில் கம்புஉடைந்து விழுந்தது. இதையடுத்து ஓடுகள் சடசடவென சரிந்து விழுந்தன.
இதில் 25 மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்தனர். இவர்களில்17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்தது அவர்கள் அரசு தலைமைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சீரு, ஆர்.டி.ஓ தமிழமணி உள்ளிட்டோர் காயமடைந்தமாணவர்களை சந்த்தினர். இச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்துக்குப் பின்னர் கீற்றுக் கூரைகளை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடம் நடத்தக் கூடாது என அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து பள்ளிக் கூட்களில் இருந்த கீற்றுக் கூரைகள் மாற்றப்பட்டன. ஆனால்தற்போது ஓடு விழுந்து பிஞ்சுக் குழந்தைகள் 25 பேர் காயமடைந்துள்ளதுபெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications